திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் கோடையில் தெளிக்கப்பட்ட சணல் விதை தற்போது வளர்ந்து, தண்ணீர் வந்ததும் அதை மடக்கி உழவு செய்யும் பணி நடக்கிறது. சணலை தெளித்து பயிரிட்டு, அதை தண்ணீர் வந்ததும் மடக்கி உழுவதால் மண் தரமானதாகவும், பயிர் செழித்து வளரவும் துணை புரிவதுடன், பயிருக்கு முக்கிய தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தருகிறது. இதனால், தண்ணீர் சிறிதளவு வைத்தாலும் அதை தேக்கி வைத்துக் கொள்வதுடன், மண் இறுகாமல் இருக்க தேவையான வேலைகளை செய்கிறது.
மேலும், பயிர் செழுமையாக, பசுந்தன்மையுடன் வளர அதிக அளவில் இது துணை புரிகிறது. இதனால், மண் மலடாவது குறைகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ சணல் விதை தேவைப்படும். இதற்கான செலவு 800 ரூபாயாகும். இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இதை பயன்படுத்துவதால் கடந்த பல ஆண்டாக ரசாயன உரங்களைப்போட்டு பயிரிடப்பட்ட விளை நிலங்களின் மண் தரம் மாறுவதுடன், பயிருக்குத்தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தரும்.இதை விவசாயிகள் கோடையில் தெளித்து பயன்பெறலாம்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் இதற்கான செயல் விளக்கம் விவசாயிகளுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறியது:
உலகில் உரம் பயன்படுத்துவதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய அரசின் செலவீனத்தில் உரங்களுக்கான மானியமாக ரூ.51 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. இது மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உரத்துக்கான செலவுகள் மிக அதிகமாகி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் உர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது.
மண்வள அட்டை கொண்டு உரமிடுதல்: தமிழகத்தில் உள்ள பலவகையான மண்களில் ஊட்டச்சத்து நிலை மாறுபடுகிறது. எனவே, அனைத்து வகை மண்ணுக்கும் ஓரே அளவு உரமிடுதல் அவசியமற்றது.
தேவைக்கு அதிகமான உரத்தை பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகமாகிறது. மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்களது மண்ணை பரிசோதித்து மண்வள அட்டை பெற்று அதன்படி உரமிடுதல் அவசியம். மண் பரிசோதனை செய்ய அந்தந்தப் பகுதி வேளாண்மை விரிவாக்க மையம், அக்ரி கிளினிக்குகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை அணுகலாம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்: பயிருக்கு தழைச்சத்து கொடுக்க உரங்களை மட்டும் பயன்படுத்துவதை குறைத்து மாற்று முறைகளையும் கையாளலாம். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபாடீயா போன்றவற்றை உபயோகிக்கலாம். நெற்பயிரில் நாற்று நடுவதற்கு முன்பு தக்கை பூண்டை விதைத்து உழுவதின் மூலம் தழைச்சத்தை பசுந்தாள் உரமாக தரலாம்.
இந்த பசுந்தாள் உரத்தால் ஹெக்டேருக்கு 45 கிலோ நைட்ரஜன் (100 கிலோ யூரியா தரும் அளவுக்கு) சத்து பயிருக்கு கிடைக்கும். மேலும் யூரியாவை அப்படியே நிலத்தில் இடுவதால் ஆவியாதல் மூலம் சத்து விரயமாகும். எனவே, வேப்பம் புண்ணாக்குடன் நன்கு கலந்து இடுவதால் சத்து விரயமாவதைத் தடுக்கலாம்.
தேவைக்கு அதிகமான தழைச்சத்து இடுவதால் பூச்சி நோய் தாக்குதல், பாஸ்பரஸ் அதிகரித்து மகசூலும் குறையும்.
பாஸ்பரûஸ கரைத்து பயிருக்கு அளிக்க உயிர் உரமான பாஸ்போ பாக்டீரியாவை பயன்படுத்தலாம். இவ்வாறு பாஸ்போ பாக்டீரியாவை மண்ணில் மேம்படுத்துவதால் பாஸ்பேட் உரம் விரயமாகாது தடுக்கப்படும்.
மண்வள அட்டையை உபயோகித்து பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே பொட்டாஷ் உரம் உபயோகிக்க வேண்டும்.
இரண்டு வகையான யூரியாவிலும் 46 சதவீதம் தான் தழைச்சத்து உள்ளது. ஆனால் குருணை வடிவ யூரியாவில் உள்ள தழைச்சத்து மிகவும் மெதுவாகவும், சீராகவும் நீண்ட நாள்களுக்கு பயிர்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும். இதனால் தழைச்சத்து பயன்படுத்தும் அளவு குறைகிறது. பயிர்களுக்கு இடும்போது தழைச்சத்து வீணாகாமல் பயிர்களுக்குக் கிடைக்கிறது.
நன்றி:தினமணி
யூரியா குருணை வடிவில் இருப்பதால் பயிர்களுக்குத் தெளிப்பது மிகவும் எளிதானது. இதில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் யூரியா கட்டியாவது இல்லை. திறந்து வைத்திருக்கும் நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாறுவதும் இல்லை.
குருணை வடிவ யூரியா சாதாரண யூரியாவைவிட எடை அதிகமாக இருப்பதால் பயிர்களுக்கு இடும்போது காற்று மற்றும் நீரினால் அடித்துச் செல்லப்படுவதில்லை.
ஆனால் சாதாரண யூரியா துகள்களாக இருப்பதால் இலையின் மேற்பரப்பில் படிந்து பயிர்களுக்கு சேதத்தை உண்டாக்குகிறது.
எனவே, அதிக பயன் உள்ள குருணை வடிவ யூரியாவைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும்படியும், விவசாயிகள் மண்பரிசோதனை பரிந்துரையின்படி பயிர்களுக்குத் தேவையான உரங்களை மட்டும் இட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மு.தெய்வேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
÷இது குறித்து உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன் கூறியுள்ளதாவது:-
பூச்சி, நோயால் பாதிப்பில்லாத வாளிப்பான, வீரியமான தரமான நாற்றுக்களை நடுவதால் மட்டுமே நடவு வயலில் அதிக தூர்கள் உருவாகி நிறைந்த விளைச்சல் பெற இயலும். நெல் நாற்றங்காலை சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், பச்சைத் தத்துப்பூச்சி ஆகிய பூச்சிகள் தாக்கி நாற்றுக்களின் தரத்தை பாதிக்கும்.
இப்பூச்சிகளின் தாக்குதலால் நாற்றின் இலைகள் சுருண்டு, மஞ்சளாகி வெளுத்து வாடிக் காணப்படும். ÷நாற்றங்காலில் 10 சதவீத நாற்றுக்களில் மேல் இரண்டு இலைகள் அரைபாகம் சுருண்டு இருந்தாலோ, 5 இடங்களில் கையால் 5 முறை தடவும்போது பேன்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டினாலோ பொருளாதார சேத நிலையைத் தாண்டியுள்ளது எனக் கணக்கில் கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
÷பச்சைத் தத்துப்பூச்சியாக இருந்தால் ஒரு சதுரமீட்டருக்குள் 20 பூச்சிகள் இருந்தால் பொருளாதார சேத நிலையாக கணக்கில் கொள்ள வேண்டும்.
இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கான நாற்றங்காலில் மானோகுரோட்டபாஸ் 36 டபிள்யூ.எஸ்.சி மருந்து 40 மில்லி அல்லது பாசலோன் 35 ஈ.சி. மருந்து 60 மில்லி அல்லது பென்தியான் 100 ஈ.சி மருந்து 20 மில்லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நன்றி:தினமணி
இது மானாவாரிக்கு மிகவும் உகந்த பயிராகும். காராமணி ஆப்பிரிக்காவில் பயிரிடப்படுகிறது. உலக சாகுபடியில் 90 சதவீதம் ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது. மேலும் தென், வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தில்லி, ஹரியாணா, தென்இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பயரிடப்படுகிறது. இதை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இருந்தாலும் மார்ச்-ஏப்ரல், ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் சாகுபடிக்கு மிகவும் சிறந்த பருவமாகும்.
தமிழ்நாட்டில் ஆடிப் பட்டத்தில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் பயிரிட கோ-6, பையூர்-1, பூசா-152, கோ(சி.பி.)-7 ரகங்கள் சிறந்தவை. கோ-6 பயிரை 55 நாட்களில் அறுவடை செய்யலாம். அனைத்து பருவங்களிலும் ஏக்கருக்கு 670 கிலோ மகசூல் பெறலாம். பையூர்-1 பயிரை 75 நாட்களில் ஜூன்-ஜூலை, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பயிரிட்டு 900 கிலோ மகசூல் பெறலாம். பூசா-152 ரகத்தை 75 நாட்களில் அனைத்து பருவங்களிலும் பயிரிட்டு 1200 கிலோ வரை மகசூல் பெறலாம்.
பையூர்-1, கே.எம்.1, கோ-2, கோ-3 சாகுபடிக்கு ஹெக்டேருக்கு விதைஅளவு தனிப்பயிராக இருந்தால் 20 கிலோவும், கலப்புப்பயிராக இருந்தால் 10 கிலோவும் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஹெக்டேருக்கு 3.50 லட்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ரகங்களுக்கு ஏற்றவாறு இடைவெளி 30-10 செ.மீ., 45-15 செ.மீ. இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காரமணியை பயிரிட நிலத்தை நன்கு உழுது மண்ணை பதப்படுத்த வேண்டும். நன்கு வடிகால் வசதியும் அமைக்க வேண்டும். ஆழமாக உழுவது மிகவும் நல்லது. காராமணி பயிருக்கு பரவலாக மழை பெய்யும் காலங்களில் நீர் பாய்ச்சத் தேவையில்லை. இப்பயிருக்கு முதல் கைக்களை 10-15 நாட்களிலும், இரண்டாவது கைக்களை 25-30 நாட்களிலும் எடுக்க வேண்டும்.
இறவையாக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு பாசலின் 1.5 லிட்டர் என்ற களைக்கொல்லி மருந்தை 900 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் தெளிக்க வேண்டும். காய்கள் 80 சதவீதம் விதை முற்றியவுடன் அறுவடை செய்து சில நாட்கள் சூரிய ஒளியில் காயவைத்து விதையை பிரித்து எடுக்க வேண்டும்.
காராமணி பயிரிடுவது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் அவர்களது பகுதியில் உள்ள வேளாண் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவேரிப்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வி.ஜெயச்சந்திரன், வேளாண் அலுவலர் டி.பாபு, உதவி அலுவலர் ஜி.திருக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தினமணி
மின் தமிழ் ஊடகத்தில் சில நண்பர்கள்
இணைய மாநாட்டில் நீங்கள் பேச நினைத்த தகவலை எங்களோடு
பகிர்ந்து கொள்ளுங்களேன்.. என்றதைத் தொடர்ந்து இந்த மடல்..
உலக விவசாயி..
உணவினைப் பற்றி பேசுகிறோம்.. ஆனால்.. உணவினை உற்பத்தி செய்யும் உழவனை பலர் நினைத்துப் பார்த்தது இல்லை.. விவசாயம் மூலம் கிடைக்கும் உணவு வேண்டும். ஆனால்.. விவசாயி வேண்டாம் என்பது தான் இன்றைய நிலை.. ஆட்சியாளர்களின் நிலை.. இன்றைய ஆட்சியாளர்கள் என்று சொல்லவில்லை.. இது வரை இருந்தவர்கள்.. இன்று இருப்பவர்கள்... என்று எல்லோரையும் தான் இங்கே குறிப்பிடுகிறேன்..
நாங்கள் இலவச மின்சாரம் அளித்தோம் என்று தமிழகத்தின் பிரதான கட்சிகள் சொந்தம் கொண்டாடுகிறனர்.. அவர்கள் அளித்த இலவச மின்சாரத்தினை வைத்து என்ன செய்ய... உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் உணவு உற்பத்தி செய்வதற்கு தானே தருகிறீர்கள்... அப்புறம் என்ன?
இந்த இலவசங்களும், மானியங்களும், கடன் தள்ளுபடிகளும் எப்படி இந்த உலகில் விவசாயியினை பொருளாதாரத்தில் உயர்த்தும்... நியாயமான விலை நிர்ணயிப்பதாகக் கூறி.. செலவுகளை கணக்கில் கொள்ளாமல்.. விலை நிர்ணயம் இது தானே இன்றளவில்...
விவசாயிகள் ஒன்றிணைந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் செய்திருக்கும் சாதிக்கட்சி விவசாயமும்,அரசியலும் விவசாயிகளின் வாழ்வின் நலம் காக்க பேசுவதாக நடித்து விவசாயிகளின் ஒற்றுமையை சீர் குழைக்கின்றனர்.. இணையத் தமிழுக்கும் நான் எழுதும் (பேசும்) விசயங்களுக்கும் என்ன பொருத்தம் என்றும்? எழுதியது (பேசியது) போதும் என்று நீங்கள் நினைக்கத் தோன்றலாம்..
இணையம் மூலம் எத்தனையோ தொலைவுகள் மிக அருகில்...
ஏன் இந்த இணைய வளர்ச்சியினை விவசாயிகளுக்கு தகவல் சொல்ல அரசு அலுவலர்களுக்கு மட்டும் கற்றுத்தந்தால் போதுமா..?
அதன் மூலமாக எங்களால் எங்கள் பொருளை விற்பனை செய்ய முடியாதா?
விளம்பரப் படுத்திட முடியாதா..?
இந்த இடைத்தரகர்களாலும், உள்ளூர் வியாபாரிகளாலும் நாங்கள் என்றும் ஏமாற்றங்களைத் தான் சொந்தமாக்கி கொள்ளமுடியுமா..?
இது விபரம் தெரிந்த விவசாயிகளின் பேச்சு...
எங்களுக்கு சலுகை வேண்டாம்.... மானியம் வேண்டாம்...
எங்கள் உழைப்பு முதலீடு இவைகளைப் பார்த்து ஒரு சராசரி இலாபக் கணக்கீட்டில் விலை நிர்ணயம் செய்யலாமே... அல்லது... விலை நிர்ணயித்தினை அரசு மேற்கொள்ளாமல் இருக்கலாம்.. அல்லது எங்களை மக்களோடு இணைய வழியில் வியாபாரத்தில் இணைக்கலாமே... இது எல்லாம் முடியாதா? ஒரு ரூபாய்க்கு அரிசி அளிக்க முடியும் போது ...
எங்களின் மாடுப்பண்ணை மூலமான பால் உற்பத்திகளை சேகரித்து மறு விற்பனைக்கு தயார் படுத்தி விற்பனை செய்யும்போது ஏன் இவைகள் முடியாது..
விவசாயிகளின் கேள்விகள் தான் இவை... நான் சொல்லும் விவசாயிகள்.. அரசியல் சாராதவர்கள்.. விவசாயத்தின் மூலமான இலாபத்தினையும் வருமானத்தினையுமே எதிர் நோக்கும் விவசாயிகள்...
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இணையத்திலும் தமிழ்...
இணையத்தில் தமிழில்.. கதைகளும் கட்டுரைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
சினிமா கவர்ச்சிப் படங்களை காட்சிப்படுத்தி... கிசு கிசுக்களை எழுதித் தான் இணையத்தில் தமிழ் வளர்க்க வேண்டும்... என்ற நிலையில் தமிழ் இணையம்.. இப்படி கிசுகிசு எழுதும் தமிழ் தளங்களின் சொந்தங்கள் தானே.. தமிழ் இணையத்திற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர்..
அவர்களின் உழைப்பு கணினி தமிழுக்கு இருந்திருக்கலாம்..
ஆனாலும் அவர்கள்.. சினிமா கிசுகிசு எழுதியா தமிழ் வளர்க்க வேண்டும்..
எந்த துறைக்காவது தமிழில் இணையத்தளம் இருக்கிறதா...?
அரசு துறைகள் அனைத்தும் தமிழ் தளங்கள் தான்... என்பீர்கள்..
அரசு தளங்கள்... அரசு ஆட்சி மாறும் போது புதிய முதல்வரின் புகைப்படத்தினை புதுப்பிப்பதோடு சரி...
அப்படியே.... தகவல்கள் இருக்கும் மாவட்ட அரசு தளங்களில்... தகவல் இருக்கின்றனவா... நிர்வாகம் குறித்தும், மாவட்ட விபரங்களுமே... இருக்கும்...
சிறு மாவட்டம் நாமக்கல்... அங்கே ஆட்சியர் அவர்கள்... இணையப் பயிலரங்கு நடத்தி கிராமங்களில் இணையம் மூலம் தொடர்பு களை ஏற்படுத்திட முனைகிறார்.. ஏன் இதனை மற்ற மாவட்டங்களில் செய்யவில்லை.. சரி விடுங்க... ஒன்றியத்திற்கு உட்பட்ட சில ஊராட்சிகளில் மக்கள் சேவை மையம் என்று கணினி வழி சேவை மையத்தினை அரசு தனியார் ஒப்பந்தம் மூலம் அமைத்தது...
கிராமத்தில் இருப்பவர்கள்... மின் மற்றும் தொலைப்பேசி கட்டணங்கள் செலுத்தலாம்.. பட்டா,சிட்டா விபரங்கள் பெறலாம்... என்பது இத்திட்டத்தின் நோக்கம்... ஆனால்... இன்று எத்தனை மக்கள் சேவை மையங்கள் சரிவர செயல்படுகின்றது.. உள்ளூர் வாசிகளுக்கு அளித்திருந்தால்.. இந்த திட்டம் பயன் அளித்திருக்கும்.. தொடந்து இயங்கி இருக்கும்... ஆனால்.. மாவட்ட அளவில் இருந்து தேர்ந்தெடுத்து மக்கள் சேவை மையம் அமைக்க தனி நபர்களுக்கு அனுமதி அளித்ததால்.. இன்று பல மையங்கள்... திறக்கப்படுவதே இல்லை..
இந்த கணினி வளர்ச்சியால் என்ன பயன்...
இந்த கணினி வளர்ச்சியினை வேளாண் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் மாற்றிட வேண்டும்...
தமிழ் இணையம் என்றால்.. அங்கே இலக்கியங்களும் கட்டுரைகளும் கவிதைகளும் மட்டும் அல்ல..
கிராமம் முதல் விண்வெளி வரை, விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை தகவல்கள் கொட்டிக்கிடக்கும் என்ற நிலை அல்லவா.. வேண்டும்.. இணையத்தில் தொழில் நுட்பங்கள் மென்பொருட்களை தமிழில் வடிவமைப்பது மட்டும் தமிழ் இணைய சேவை அல்ல...
தமிழில் தளம் அமைத்து தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்களே... அவர்களின் செயலும் தமிழ் இணையத்திற்கு ஆற்றும் சேவைதான்...
சில ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்.. சிலருக்கு தவறு என்று படலாம்.. ஆனால்.. சில உண்மைகள் சிலருக்கு சுடும் என்பது பெரியோர்களின் கருத்து...
தமிழ் இலக்கியமும் சங்க காலமும் மட்டுமே தமிழ் பாரம்பரியம் கலை அல்ல... விவசாயம், நெசவு என பல இருக்கின்றது... ஆனால்.. இங்கே அவைகள் குறித்து காண முடியவில்லை என்பது விவசாயிகளின் பார்வையில் வருத்தமே...
இணையத்தில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப தகவல் இருக்கிறது,, இதனை எத்தனை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்... எதற்கு இந்த வீண் முயற்சி... என்று பேசிய வேளாண் அலுவலர்கள் அதிகம்...
அவர்கள் மட்டுமே மெத்தப் படைத்த வேளாண் விஞ்ஞானிகள் போல பேச்சு..
எங்களுக்கு விவசாயம் குறித்து கற்றுக் கொடுக்காதீர்கள்..
விற்பனைக்கு வழிகாட்டுங்கள்..
நாங்கள் உங்களுக்கு உற்பத்தி செய்து அளிக்கிறோம்...
என்பது தான் விவசாயிகளின் கருத்து... ஆனால்..
இதை யாரும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை..
எனவே தான் நாங்கள் புதிய முயற்சி எடுத்திருக்கிறோம்...
விவசாயிகளின் விபரங்களை இணையத்தில் ஏற்றுவது...
அவர்களிடம் எந்த காலத்தில் என்ன பொருள் எந்த அளவு உற்பத்தி செய்யப் பட்டு விற்பனைக்கு கிடைக்கிறது...
என்பது குறித்து புதுப்பிக்க முடிவு செய்துள்ளோம்..
இதன் மூலம்... விவசாயிகள் மற்றும் மக்களுக்கு இடையே ஒரு நேரடி வணிகத்தினை நியாயமான விலையில் ஏற்படுத்தித் தரமுடியும் என்று நம்புகிறோம்...
எந்த ஒரு விசயத்தினையும் அரசுதான் செய்ய வேண்டும் ,,, என்றில்லை... நல்ல விசயங்களை யார் வேண்டுமானாலும் பேசலாம்.. செயல்படுத்தலாம்..
இந்த திட்டத்தினை அரசு செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை..
சினிமா கிசு கிசு மூலம் தமிழ் இணையம் வளர்ப்பவர்களை செயல்படுத்தச் சொல்ல வில்லை...
விவசாயிகளோடு வாழும் விவசாயி மகனாக.. சராசரி கிராமத்தானாக... இந்த செயலினை நான் முன்னெடுத்து செயல்பாட்டிற்கான செயல்பாடுகளை மேற்கொள்கிறேன்,, என் இந்த முயற்சிக்கு துணையிருங்கள்... பல தொழில் நுட்ப மற்றும் இதற்கான உதவிகளை செய்யுங்கள்...
எங்கள் விவசாய குடும்பங்களை இந்த பாரினில்.. பாருங்கள்.. நாங்கள் செய்வது தொழில் தான்.. நாங்களும் பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறோம்.. என்று பெருமை பேச நினைக்கிறோம்...
இன்று விவசாயிகளும் மக்களும் ஒன்றிணைந்து இல்லை... இவர்களின் ஒருங்கிணைவு... இன்றைய இணைய உலகில் வலம் வரும் நம் தாய் மொழி தமிழால்... சாத்தியம் என்று நான் நம்புகிறேன்...
விவசாயம் சார்ந்த நான் ஒரு தளம் இயக்கி வருகிறேன்.. அதனை ஆரம்பித்து வழி நடத்தி செல்ல பல சிரமங்கள்.. மிக முக்கிய பிரச்சனை நிதி..
அதற்காக.. விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் விளம்பரம் கேட்டேன்...
அவர்கள் சொன்ன பதில்..
தமிழுக்கு, விவசாயத்திற்கு கிடைத்த அவமானமாய் உணர்ந்தேன்... ஆம்... தமிழ்ல பெருமைக்கு வெப்சைட் நடத்துற...
எந்த விவசாயி வந்து பார்க்க போறான் என்றார்கள்..
இன்று தமிழில் இணையதளம் நடத்துவது பெருமைக்கு செய்யும் வேலையாக நினைக்கின்றனர்.. தமிழில் இணையம் ஆரம்பிப்பது பெருமைதான்.. ஆனால்.. பெருமைக்காக என் வேளாண் தளம் அல்ல...
சரி என்ன நிதி பிரச்சனை எழுந்தாலும் யாரிடமும் சென்று விளம்பரம் கேட்பதில்லை.. அவர்களாகவே வரும் காலம் வரும் என்று காத்திருக்கிறேன்...
இங்கே நான் சொல்லும் விசயமும் இது தான்..
விவசாயிகளின் வாழ்க்கை பொருளாதார நிலை மேம்பட விவசாயிகள் மற்றும் மக்களுக்கு இடையேயான நேரடித் தொடர்பே சிறந்த ஒன்று.. இன்று பெரிய பெரிய நிறுவனங்களும் விவசாயத்தினை தொழிலாக செய்யும் நிலைக்கு வந்து விட்டனர்... சிறு விவசாயிகள்.. கடன் , இலாபம் இன்மை என்ற பிரச்சனைகளால்.. விவசாயத்தினை விட்டு .. இல்லை.. விவசாய நிலத்தினை விற்றுவிட்டு எட்டி நிற்கத் தொடங்கி விட்டனர்...
பெரும் நிறுவனங்களில் கையில் விவசாயம் முழுமையாக சிக்கிக் கொண்டால்.. எலிப் பொறிக்குள் சிக்கிய வடை போலத்தான் நமக்கு உணவு என்பது...
இந்த மிகச் சாதாரண சிந்தனையை சிந்தித்து பாருங்கள்..
விவசாயிகள் மற்றும் மக்கள் ஒருங்கிணைந்த வேளாண்மைக்கு வழி பிறக்கும்..
என் இந்த திட்டம் நான் எனும் ஒருவனால்.. மட்டுமே செய்ய இயலும் என்பது சாத்தியம் இல்லை...
இருந்தாலும் நான் முயன்று வருகிறேன்...
என் முயற்சியின் பலன் இன்று தமிழ் விவசாய தகவல் ஊடகத்தில் உறுப்பினர்களாய் 700 க்கும் மேற்பட்டோர்..
தமிழில் வடிவமைக்கப் பட்ட வேளாண்மைக்கான முதல் நிகழ்நிலை இணையம்..
இதனை ஆரம்பிக்க பலரிடம் உதவிகள் கேட்டேன்..
சிறு உதவி கூட கிடைக்க வில்லை..
சரி என்று கடன் வாங்கி கணினி வாங்கினேன்...
இணையத்தில் இருக்கும் தகவல்களை திரட்டி தொழில் நுட்பம் கற்றேன்.. தமிழில் வேளாண் தளம் அமைத்தேன்... இன்னும் விவசாய எண்ணங்களை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்திட நினைக்கிறேன்... அதற்காக கிராமங்கள் தோறும் தன்னார்வலர்களை தேடிக் கொண்டு இருக்கிறேன்... அது மட்டும் அல்ல... தன்னார்வலர்களுக்கு கணினி மற்றும் சிறு ஊக்கத் தொகையேனும் அளிக்க தன்னார்வ நிதி அளிப்போரினையும் தேடிக் கொண்டு இருக்கிறேன்...
கடன் வாங்கி வாங்குன கம்பியூடரை பணம் கட்டலனாலும் தூக்கிட்டு போகாத கடன் அளித்தவர்...
சுமார் 6 மாதங்கள் ஆகியும் கட்டணம் செலுத்த வில்லை என்று இணைய இணைப்பினை இதுவரை துண்டிக்காத பிஎஸ்என்எல் நிறுவனமுமே எனக்கு இப்போதைய உதவியாளர்கள்...
இந்த நேரத்தில் இவர்களுக்கு நன்றி சொல்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...
கார்பரேட் கைகளில் விவசாயமா? இல்லை தொடந்து விவசாயிகளின் கையில் விவசாயமா?
அதாவது..
எலிப்பொறிக்குள் விவசாயமா? இல்லை கணிப்பொறிக்குள் விவசாயமா? உணருவது உங்கள் பொறுப்பு... என் உலக விவசாயி திட்டத்திற்கு உதவ நினைப்பது உங்கள் விருப்பு...
நாங்கள் தொடருவோம்... உலகம் இனி உழவர்கள் கையில் ... என்ற வாசகத்தினை இணையத்தில் தாங்கி எங்கள் சேவைகளை....
***********************************************************************************************************************************************************************************************************
மேற்காணும் எண்ணங்கள் தான் நான் பேச நினைத்தது... நான் இதனை எழுதியோ.. தட்டச்சு செய்தோ வைக்கவில்லை... என் மனதில் இருக்கும் என் விவசாயம் சார்ந்த உரத்த சிந்தனைகளை ஒலிக்கச் செய்யவே நினைத்திருந்தேன்... பேசும் போது இன்னும் பல விளக்கங்கள் அளித்திக்க வாய்ப்பு உண்டு.. வரி வடிவம் என்பதால்.. உதாரணங்கள் இல்லை...
உலக விவசாயி குறித்து...
தமிழக விவசாயிகளின் விபரங்கள்..
விவசாய முறைகள்..
விளைபொருட்கள் விபரங்கள்...
உட்பட அனைத்து தகவல்களையும் தொடர்பு விபரங்களோடு.. அளிக்க முனைவது... தான்,.. உலக விவசாயி திட்டம்...
உங்களால் முடிந்த உதவிகள் செய்யுங்கள்>. முடிந்தால்,,உங்கள் கிராமத்தின் அல்லது உங்கள் அருகில் உள்ள கிராமத்தின் விவசாயிகளின் தகவல்களை சேகரித்து தரலாம்...
அதற்கான விண்ணப்பங்கள் தேவைப் படுவோர்... உங்கள் முகவரியினை அனுப்பினால்.. நான் அஞ்சல் மூலமாக படிவங்களை அனுப்புகிறேன்..
ஒரு நல்ல விவசாய உலகம் மலர்ந்திட உதவுங்கள்.. இந்த உலகம் நமக்காக படைக்கப் பட்டது,..
விவசாயிகள் மற்றும் மக்களின் ஒருங்கிணைப்பால் மட்டுமே.. நல்ல அரோக்கியமான சத்தான இயற்கை உணவுகளை உற்பத்தி செய்ய இயலும்...
அனைவரும் இணைவோம்... விவசாயிகள் என்ற போர்வையில் விளம்பர பிரியர்களையும் அரசியல் செய்யும் நபர்களையும் அடையாளம் காண்போம்..
இதுவரை நான் மட்டுமே... இனி இந்த மடல் மூலம் என் எண்ண சிந்தையில் ஒருங்கே இருக்கும் நண்பர்கள் இணைவார்கள் என்று நம்புகிறேன்...
700 பேரை நான் இணைத்தேன்...
நாம் எல்லாம் இணைந்தால்...
அனைவரையும் விவசாயம் எனும் சமூகத்தில் இணைக்க முடியும்.///
உங்களின் நேர் மறையான எதிர் மறையான கருத்துக்கள் யாவனவற்றையும் எதிர்பார்க்கிறேன்...
நான்... சக்திவேல்...
www.agriinfomedia.com
+91 99943 96096
இந்த உலகிற்கு கடவுள் யார் என்பது எம் பேச்சு அல்ல..
இந்த உலகில் கடவுள் உணவளிக்கும் விவசாயி என்பதே நம் பேச்சு..
பொது நலம் பற்றி சிந்தனை இல்லாதவர்கள்...
இந்த உலகில் நடக்கும் குற்றங்களுக்கு..
பங்காளி ...
REAAD -TRUST (NGO)
கிராமம் கல்வி மற்றும் வேளாண் முன்னேற்ற சமூக ஊடகம்,
பட்டிமணியகாரன் பாளையம்
ஈரோடு-638462
+91 999 439 6096
www.agriinfomedia.com
பெயர்:
பாலினம்:
வயது:
முகவரி:
நகரம்:
மாநிலம்:
அஞ்சல் குறியீடு:
தொலைபேசி:
செல்பேசி:
மின்னஞ்சல்:
நிலம்: புஞ்சை
நஞ்சை
அளவு(ஏக்கரில்):
பாசன முறை: நேரடி நீர்ப்பாய்ச்சல்
சொட்டு நீர்
தெளிப்பு நீர்
மானாவாரி(மழை எதிர்பார்த்து) ( check Box)
நிலத்தின முழுமையான விபரங்கள்:
சாகுபடி முறை :
பயிர்கள் சாகுபடி விபரங்கள்:
நீங்கள் சாகுபடி செய்யும் பயிர்கள் குறித்த விபரங்களை குறிப்பிடவும்.
பயிர் சாகுபடிகாலம் அறுவடைகாலம் எதிர்பார்க்கும் அளவு
நீங்கள் உங்களின் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய நினைக்கிறீர்களா?
ஆம்
இல்லை
நீங்கள் கால்நடை வைத்துள்ளீர்களா?
ஆம்
இல்லை
ஆம் அனில் கால்நடைகள் குறித்து குறிப்பிடவும்:
உதாரணம்: ஆடு- 12 ,மாடு -2 இப்படி
வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துகிறீர்களா?
ஆம்
இல்லை
ஆம் என்றால் ..
வாடகை
சொந்தம்
சொந்தமாக என்றால் என்ன மாதிரியான இயந்திரங்கள் வைத்துள்ளீர்கள் :
டிராக்டர்
டில்லர்
பவர் ஸ்ப்ரேயர்
மற்றவை
மற்றவை எனில் என்ன என்று விளக்கமாக குறிப்பிடவும்
இல்லை என்றால் .....
நீங்கள் எந்த மாதிரியான இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்துகிறீர்கள். வாடகை உட்பட விபரங்களை குறிப்பிடவும்.
உங்களுக்கு தேவைப்படும் விவசாயம் சார்ந்த உதவிகள்:
விவசாயம் சார்ந்த வேறு தொழில்கள் செய்கிறீர்கள்:
ஆம்
இல்லை
ஆம் எனில் நீங்கள் செய்யும் தொழில்களை தெளிவாக குறிப்பிடவும்:
உதாரணம்: மாடு வளர்ப்பு- 10 மாடுகள்
காளாண் பண்ணை
நான் என்னைப் பற்றிய மற்றும் என் விவசாயம் சார்ந்த தகவல்களை சரியாக அளித்துள்ளேன். விவசாய தகவல் ஊடகத்தின் உலக விவசாயி திட்டத்தில் நான் கூறிய விபரங்களை வெளியிட சம்மதிக்கிறேன்.
மேலும் திட்டத்தில் இணையப்பதிவு(Internet Registration Charge) மற்றும் உறுப்பினர் அடையாள
அட்டைக்காக ரூபாய் 80/- அளித்துள்ளேன் / நான் எந்தவிதமாண தொகையும் அளிக்கவில்லை.
மேலும் சேவைகள் பெற...
ஊடகத்தின் மாத செய்திமடல் அனுப்பவும் / வேண்டாம்.
(அஞ்சல் கட்டணம் ரூபாய் 60/ஒரு ஆண்டு )
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து, தற்போது மழை பெய்து வருவதால் மாறுபட்ட தட்பவெப்ப நிலை காரணமாக மா மரங்களில் தத்துப்பூச்சிகள் அதிகளவில் காணப்படுகிறது.
பூச்சிகள் தாக்கத்தால் பூங்கொத்தில் உள்ள பூ மொக்குகள் கருகி உதிர்ந்து விடும். மா இலைகளில் தேன் போன்ற கழிவு திரவமும், கரும்பூஞ்சாணமும் தென்படும். கட்டுப்படுத்தும் முறைகள்: பூக்கள் மலரும் சமயத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பாக பயிர்பாதுகாப்பினைத் தொடங்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சிறிய மற்றும் பெரிய கிளைகளின் பட்டைகளில் பூச்சிமருந்து படுமாறு தெளிக்க வேண்டும். நன்கு கலந்த பின்பு டீபால் ஒட்டு திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
மரக்கிளைகளை கவாத்து செய்யவேண்டும். களைகளை நீக்குவதன் மூலம் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறி எக்டருக்கு 1 என்ற எண்ணிக்கையில் வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். அசிபேட் 1 கிராம் ஒரு லிட்டர் நீரில் அல்லது பாசலோன் 2 மில்லி லிட்டர் ஒரு மில்லி லிட்டர் நீரில் கலந்து பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறையாக மா பூ பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
மா வடு வரும் நேரத்தில் கார்பரில் இரண்டு கிராம் ஒரு லிட்டர் நீரில் அல்லது பென்தியான் 1 மி.லி கரைத்து தெளித்தும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது
மீதி 35 சதவீத தொகை வங்கிகள் மூலம் 3 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் தொகையாக விவசாயிகளுக்கு கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.இது தவிர 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உரங்களும் மற்றும் விதைக்கரும்பு மானியமாக 4 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. எனவே அதிக அளவில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து கரும்பு நடவு செய்ய வேண்டும். மேலும் சொட்டுநீர் பாசன முறையில் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால் இதற்கென ஆலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்திற்கு 90470-49500 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதற்குரிய தீர்வு சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உடனடியாக பெற்றுத்தரப்படும்.
கடந்த ஆண்டு ஆலை அரவைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கப்படும். மேலும் வரும் அரவைப் பருத்திற்கு கரும்பு சப்ளை செய்யும் அங்கத்தினருக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு தனி அலுவலர் பேசினார்.
திருப்பத்தூர் மேற்கு கோட்ட கரும்பு அலுவலர் டி.கே.வெற்றிவேந்தன் பேசியதாவது:கரும்பில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், பாசன நீர் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. மேலும் சராசரி மகசூலும் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. சேமிக்கப்படும் பாசன நீரால் கூடுதல் பரப்பில் கரும்பும், மற்ற பயிர்களும் விளைவிக்கலாம். சொட்டுநீர் பாசனத்தில் அகலப்பார் முறையில் கரும்பு நடவு செய்வதால் பூச்சி நோய் தாக்குதல் குறையும்.மேலும் கரும்பு அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி கரும்பு வெட்டலாம். அகலப் பார் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதால், பார்களுக்கு இடையில் பவர் டில்லர், மினி டிராக்டர்களை பயன்படுத்த முடியும். இதனால் கூலியாட்கள் பிரச்சனை குறைகிறது.
சொட்டுநீர் பாசனம் அமைப்பதால் கரும்பிற்கு தண்ணீர் கட்டும் செலவும், நேரமும் கூலியாட்கள் பிரச்சனையும் குறைகிறது. மேலும் ஏக்கருக்கு 60 முதல் 70 டன் மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.கரும்பு அபிவிருத்தி அலுவலர்(பொறுப்பு) ஆர்.வெங்கிடசாமி பேசியதாவது:கோடைக் காலத்தில் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச முடியும் பரப்பில் மட்டுமே பொதுவாக கரும்பு நடவு செய்ய வேண்டும். குறைந்தது ஒன்றேகால் அடி ஆழத்திற்காவது வயலில் உழவு செய்ய வேண்டும். கரும்பு நடவிற்கு ஏழு மாத கால வயதிற்குட்பட்ட நாற்றங்கால் வயல்களில் இருந்து மட்டுமே விதைக்கரும்பு எடுத்து நடவு செய்ய வேண்டும்.
கரும்பு நடவு செய்த 30,60 மற்றும் 90 நாட்களில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவுப்படி உரத்தை பிரித்து இட வேண்டும். 5 மற்றும் 7ம் மாதங்களில் கரும்பில் சோகை உரிக்க வேண்டும். 7வது மாதத்தில் கரும்பிற்கு விட்டம் கட்ட வேண்டும். தேவைப்படும்போது பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அறுவடையின்போது கரும்பை அடியோடு வெட்ட வேண்டும். இம்முறைகளை பயன்படுத்தினால் அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம்.இவ்வாறு வெங்கிடசாமி பேசினார். ஏற்பாடுகளை கரும்பு உதவியாளர்கள் கண்ணன், பச்சையப்பன், ஜெயராமன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். கரும்பு பெருக்க உதவியாளர் வி.முத்துசாமி நன்றி கூறினார்.
நீர்வளம் நிறைந்த பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் அதிகபட்ச மகசூல் பெற பரிந்துரை செய்யப்படும் அளவாகும். ஒவ்வொரு பருவத்திற்கும் பாசன நேரத்தை நிர்ணயிப்பதன் மூலம் தேவைப்படும் சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். உதாரணமாக மணிக்கு 8 லிட்டர் நீர் வெளியேற்றும் 4 சொட்டுவான்கள் மூலம் மரம் ஒன்றுக்கு தினமும் 65 லிட்டர் பாசனம் செய்ய தேவைப்படும் பாசன நேரம் 2 மணி நேரமாகும். இவ்வாறு ஒவ்வொரு பாசன அளவிற்கும் பாசன நேரத்தைக் கணக்கிட்டு அதன்படி சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். மேற்பரப்பு பாசன முறையுடன் ஒப்பிடும் போது சொட்டு நீர்ப்பாசனத்தில் 70 சதம் பாசன நீர் சேமிப்பு கிடைக்கும்.
செய்யும் தொழிலில் பல லட்சங்களை, கோடிகளை குவிக்கும் பலர் எச்சில் கையால் காக்கை கூட விரட்டாதவர்களாக இருப்பதை காணலாம. ஆனால், இடது கை செய்யும உதவி வலது கைக்கு தெரியாமல் உதவிகள் செய்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.மதுரையில் செயல்படும் அக்ரோ கிளப் இதில் இரண்டாவது வகை.
இது, விவசாயம் தொடர்பான தொழில்களில் ஈடுபடும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் இணைந்த ஒரு அமைப்பு.தொடங்கி 8மாதங்களே ஆன நிலையின் இநத அமைப்பின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. எந்த லாப நோக்கமும் இல்லாமல், கேள்விப்பட்ட உதவிகளை உடனே செய்து தருகிறார்கள்.உன் வருமானத்தில் சிறிய பங்கை ஏழைகளுக்கு கொடு என்கிறது விவிலியம். இந்த வேதவாக்கை அப்படியே கடைபிடித்து தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளின் உதவிக்காக செலவிட்டு வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சிஙகராஜ். சிறிய அளவில் உரம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை மதுரையில் நடத்தி வருகிறார்.தங்கள் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் பற்றி நம்மிடம் பகிரிந்து கொண்டார்.
''இன்றைக்கு உலக அளவில் லயன்ஸ்கிளப், ரோட்டரி கிளப் போன்ற சேவை அமைப்புகள் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை பார்த்து எனக்கு இது போன்ற ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. குறிப்பாக ஏழை குழந்தைளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அது இருக்க வேண்டும் என்று தீர்மானித்தோம. ஏற்கனவே உரம் தயாரிப்பாளர்களுக்கு என்று தனியாக ஒரு சங்கம் செயல்படுகிறது. அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எனது முடிவை தெரிவித்தேன். உறுப்பினர்களான சண்முகநாதன், ஹேமா உள்பட அனைவரும் உடனே இந்த அமைப்பை தொடங்கி பதிவு செய்வதென்று முடிவு செய்தார்கள். தற்போது மதுரை அக்ரோ கிளப் என்ற பெயரில் செயல் படடு வருகிறோம்.
இந்த அமைப்பின் மூலம் மதுரையில் உள்ள பார்வையற்ற குழந்தைகள் படிக்க உதவிடும் வகையில் பிரெய்லி புத்தகங்கள், உடைகள் உள்பட 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உதவி செய்தோம். இது தவிர மதுரை புதூர் பகுதியில் உள்ள அன்பகம் மனநலன் குன்றிய குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வீல்சேர், கல்வி உபகரணங்கள் கொடுத்தோம். இது தவிர அந்த குழந்தைகளை மகிழ்ச்சி படுத்த சிறிய தோட்டம் ஒன்றை உருவாக்கி தந்தோம். இத்துடன் மதர் தெரசா இல்லம், சரஸ்வதி பாலர் இல்லம் ஆகிய இடங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் சில உதவிகள் செய்தோம். சமீபத்தில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் இருக்கும் விவேகானந்தா நர்சரி பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் டிவிடி பிளேயர் ஒன்றை வழங்கினோம்.
இப்படியாக சில உதவிகளை செய்து வருகிறோம். வரும் காலத்தில் எந்த கட்டணமும் இல்லாமல் ஏழைக்குழந்தைகள் இலவசமாக படிப்பதற்காக ஒரு கட்டணமில்லா பள்ளியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.தற்போது மதுரை அளவில எங்களது உதவிகளை செய்து வருகிறோம். இது போல் பிறமாவட்டங்களில் உள்ள எங்களது சங்க உறுப்பினர்களும் உதவிகள் செய்ய ஆர்வமுடன் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இது போல் சேவைகளை செய்ய வேண்டும் என்ற நிலையில் திட்டமிட்டு, உறுப்பினர்களின் ஆர்வத்தை உறுதிப்படுத்தி அக்ரோ கிளப்பில் இணைத்து வருகிறோம்.நிச்சயமாக இந்த அமைப்பு மூலம் மாவட்டங்கள் தோறும் பலர் பயனடைவார்கள் என்பது நிச்சயம்.எங்கள் அமைப்பில் சேரவிரும்புபவர்கள் விவசாயம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இது போன்ற சேவைகளுக்கு தர உறுதி அளிக்க வேண்டும. மேலும், சிறிதளவு நேரத்தையும் செலவிட தயாாராக இருக்கவேண்டும, இது தான் விதிமுறை.இது போன்ற எண்ணமும், விருப்பமும் உள்ள நபர்களை வரவேற்கிறோம்'' என்கிறார்.
நீங்களும் சேவை செய்ய விரும்புகிறீர்களா.............திரு.சிஙகராஜ அவர்களை 94437 74229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை: ''விவசாய நிலம் அனைத்து சத்துகளையும் பெற்று செழிக்க, இயற்கை வழி விவசாயத்தை கையாள விவசாயிகள் முன்வரவேண்டும்,'' என, வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தரேகா பேசினார்.பெரியநாயக்கன்பாளையம், புதுப்புதூரில் மண்புழு உரம் தயாரிப்பு செயல்விளக்க முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தரேகா தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், வீடு மற்றும் தோட்டக்கழிவுகளை 45 நாட்கள் குவியலாக இட்டு, மட்க வைத்து, இயற்கை உரம் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரசாயன உரங்கள், பூச்சி மருந்து பயன்படுத்துவதால் மண் வளம் குறைந்து, மண்ணில் உள்ள உயிர்கள் அழிந்து, மண் வளம் பாதிக்கப்படும். இயற்கை விவசாய முறையை கையாள விவசாயிகள் முன் வரவேண்டும்.
மண்புழு உரம் தவிர, மண்புழு வடிநீரை சேமித்து பயிர்களுக்கு தெளிப்பதால் அவை, பயிர் ஊக்கியாக செயல்பட்டு, நல்ல மகசூல் கிடைக்கும்.இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.முகாமில், மண்புழு வடிநீரை குழி மற்றும் தொட்டிகளில் சேமிப்பது குறித்து உதவி வேளாண்மை அலுவலர் மோகன்தாரியா பட்ஜக், ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் செயல்விளக்கமளித்தனர். துணை வேளாண்மை அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பயிரிட்டுள்ள உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு வகைகள், தற்போது பூத்து காய் பிடிக்கும் நிலையில் உள்ளன.
இதற்கு தழைச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. இதை இலை வழி ஊட்டமாக பயிருக்கு தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். கூட்டு நுண் சத்தான டி.ஏ.பி., அமோனியம் சல்பேட், போரக்ஸ் கலந்த கலவையை தெளிக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு, 2.5 கிலோ டி.ஏ.பி., ஒரு கிலோ அமோனியம் சல்பேட், அரை கிலோ போராக்ஸ் மருந்தை, 37 லிட்டர் தண்ணீரில், 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டினால், 35 லிட்டர் கரைசல் கிடைக்கும். இதனுடன் 465 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இதை விதைத்த 25 முதல் 35 நாட்களுக்குள் செய்ய வேண்டும். இதனால் பூ உதிர்வது தடுக்கப் பட்டு, நல்ல மகசூல் கிடைக்கும். பயறு வகைகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் ஊக்கி தெளித்து, மகசூலை பெருக்கலாம், என உழவர் பயிற்சி மைய உதவி இயக்குனர் லயோலா அன்புக்கரசி தெரிவித்தார்.
ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், தை பட்டம் ஆகிய மூன்று பட்டங்களிலும் சூரியகாந்தியை பயிரிடலாம் என பேராசிரியர் மனோகரன் தெரிவித்தார். திண்டிவனம் எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் பட்டய முதலாமாண்டு மாணவர்களுக்கு சூரிய காந்தி வயலில் செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. பேராசிரியர் மனோகரன் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். இந்த பயிற்சி குறித்து பேராசிரியர் மனோகரன் கூறுகையில், ஆராய்ச்சி நிலையத்தில் மகசூல் சோதனைக்காக 9 ரகங்கள் அடங் கிய சூரியகாந்தி பயிரிடப்பட் டுள்ளது. இதில் தேர்வு செய்யும் வீரிய ஒட்டு சூரியகாந்தி விதைகளை தமிழகத்தில் 40 இடங் களில் பயிர் செய்து, ஆராய்ச்சி செய்து விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறோம். சூரியகாந்தி பயிரில் பி.எஸ். எச்-1 மற்றும் டி.என்.எஸ்.எச்-1 ஆகியவை வீரிய ஒட்டு ரகங்களாகும். இவற்றின் வயது 85-90 நாட் களாகும். சாதாரண ரக சூரிய காந் தியாக இருந்தால் ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். ஆனால் இத்தகைய வீரிய ஒட்டு ரகங்கள் ஏக்கருக்கு 2 கிலோ போதுமானது.
வடிகால் வசதியுள்ள, தண் ணீர் தேங்காத நிலம் சூரியகாந்தி பயிரிட ஏற்றது. ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், தை பட்டம் ஆகிய மூன்று பட்டங்களிலும் சூரியகாந்தியை பயிரிடலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டெசிம் மருந்து கலந்து போடலாம். பாத்திக்குப் பாத்தி 60 செ.மீ., இடைவெளியும், செடிக் குச் செடி 30 செ.மீ., இடை வெளியும் இருக்க வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம் பல் சத்து முறையே 24, 36, 34 சதவீத அடிப்படையில் இருக்க வேண்டும். அதன்படி தழைச்சத் துக்கு ஏக்கருக்கு 52 கிலோவும், மணி சத்தாக 225 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும், சாம்பல் சத்தாக 40 கிலோ பொட்டாஸ் உரமும் இடவேண்டும். அயல் மகரந்த சேர்க்கை நடக்க ஒரு ஏக்கருக்கு 1 தேனீ பெட்டியாவது வைக்க வேண்டும். பிளானோபிக்ஸ் என்ற வளர் ஊக்கியை ஒரு ஏக்கருக்கு 45 மில்லியை 30 மற்றும் 60வது நாளில் தெளிக்க வேண்டும். பூக்கள் மலர ஆரம்பித்த பிறகு இரண்டிரண்டு பூக்களாக சேர்த்து தேய்த்து விட வேண்டும். மெல்லிய மஸ்லின் துணியால் பூவை ஒற்றி எடுத்து மற்ற பூக்களில் விட வேண்டும். இவ்வாறு திண்டிவனம் எண் ணெய் வித்து ஆராய்ச்சி நிலைய போராசிரியர் மனோகரன் கூறினார்.
தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்
