விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

காபி ஏற்றுமதி சரிவு


காபி பருவத்தின் முதல் பத்து மாதங்களில் (2008 அக்டோபர்-2009 ஜுலை), இந்தியாவில் இருந்து 60 கிலோ கொண்ட 22.80 லட்சம் மூட்டை காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. (சென்ற ஆண்டு 26.60 லட்சம் மூட்டைகள் ஏற்றுமதி) .

இது சென்ற வருடம் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 14.28 விழுக்காடு குறைவு.

அதே நேரத்தில் மற்ற காபி உற்பத்தி செய்யும் நாடுகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி, காபி ஏற்றுமதி குறைந்ததற்கு காரணம். இத்துடன் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் காபி விலை அதிகமாக இருந்தது.

கொலம்பியா, கவுதமாலா ஆகிய நாடுகளின் காபி ஏற்றுமதி குறைந்துள்ளது.

அதே நேரத்தில் பிரேசில், வியட்நாம், இந்தோனிஷியா நாடுகளின் காபி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பிரேசில் காபி ஏற்றுமதி 15.59 விழுக்காடு அதிகரித்துள்ளது. பிரேசில் 2 கோடியே 63 ஆயிரம் மூட்டை காபி ஏற்றுமதி செய்துள்ளது. வியட்நாம் 1 கோடியே 57 ஆயிரம் காபி மூட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தோனேசியா 51லட்சத்து 10 ஆயிரம் காபி மூட்டை ஏற்றுமதி செய்துள்ளது.
நன்றி: www.webdunia.comகுறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்