விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கதிரமங்கலம் செம்மை நெல் சாகுபடி (எஸ்.ஆர்.ஐ.) முறை

(தமிழ்நாடுகாவிரிடெல்டாபகுதியில் திருஎஸ்.கோபால்அவர்களால்உருவாக்கப்பட்டு, பின்பற்றப்பட்டது)

காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தத்தக்க வகையில், செம்மை நெல் சாகுபடி முறை நுட்பங்களின் அடிப்படையில், இம்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.ஐ முறையில் நடவு செய்ய விவசாயிகளுக்கு உள்ள இடர்பாடுகள்
எஸ்.ஆர்.ஐ முறைபடி, முளைவிட்டு மிகக் குறைந்த நாட்களே ஆன நாற்றுகள் நடப்படும் போது, அவை அதிக வெயிலுக்கும், தொடர்ந்த
காற்றுக்கும் பாதிப்புக்குள்ளாகக்கூடும்.

மேற்கண்ட பிரச்சனைக்குத் தீர்வு:
நாற்றங்காலிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட முதல் இரண்டு வாரங்களுக்கு, நாற்றுகளை ஐந்து ஐந்தாக சேர்த்து நடுவதன் மூலம், வெயிலிலிருந்தும் காற்றிலிருந்தும் சிறிது பாதுகாப்பு கொடுக்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பின், அவற்றைத் தனித் தனியே பிரித்து, மீண்டும் நடுதல், நாற்றுகள் வலுபெற்று இறக்காமல் விரைவாக வளர உதவும்.

இம்முறையில் உள்ள குறைபாடு.
இரண்டாம் நடவிற்கு கூடுதல் ஆட்கள் தேவைப்படுவார்கள். எனினும், கூடுதல் மகசூல் மூலம் இச்செலவினை சரிகட்டி விடலாம் என விவசாயிகள் எண்ணுகிறார்கள்.

பெறப்படும் மகசூல் : இம்முறையில் ஹெக்டேருக்கு சராசரி 7.5 டன் வரை மகசூல் கிடைக்கிறது.

இம்முறையில் கையாளப்படும் உத்திகள்

நாற்றங்கால் உருவாக்குதல்

 • 12 நாட்களுக்குள் தரமான நாற்றுகளை உருவாக்கி தரும் வகையில் நல்ல பாசன மற்றும் வடிகால் வசதி உள்ள நிலம் அவசியம்
 • 100 சதுர மீட்டர் (2.5 சென்ட்) அளவுள்ள நாற்றங்கால் அமைக்கப்படுகிறது. ஒரு ஹெக்டேர் பரப்பில் பயிரிட இந்நிலம் போதுமானது.
 • ஒரு ஹெக்டேரில் பயிரிடத் தேவையான நாற்றுகளை வளர்க்க 200 அடி நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்ட 300 காஜ் பாலித்தீன் ஷீட்டுகள் தேவை.
 • விதைகளைத் தூவி வளர்க்க ஒரு மீட்டர் நீளமும், 0.5 மீட்டர் அகலமும் 4 செ.மீ உயரமும் கொண்ட சட்டம், நாற்று மேடை அமைக்க தேவை.
 • சர்க்கரை ஆலைக்கழிவு அல்லது தொழு உரம் கொண்டு, நாற்றுமேடைச் சட்டம் நிரப்பப்படுகிறது.
 • அஷொஸ்பைரிள்ளம் மற்றும் பாஸ்பொபெக்டிரியம் கரைசலில் ஊற வைக்கப்பட்ட முளைவிட்ட விதைகள் ஹெக்டேருக்கு 5 கிலோ தேவைப்படும்.
 • இவ்விதைகள் ஒரு பாத்திக்கு 45 கிராம் என விதைக்கப்படுகிறது. பின்னர், சலிக்கப்பட்ட சர்க்கரை ஆலைக்கழிவு கொண்டு விதைகள் மெலிதாக மூடப்படுகிறது.
 • ஐந்தாம் நாள் வரை நாளொன்றுக்கு இருமுறை பூந்தெளிப்பான்கள் மூலம் நீர் தெளிக்கப்படுகிறது.
 • எட்டாவது நாளில் 30லிட்டர் நீரில் 150கிராம் யூரியா கரைக்கப்பட்ட, 0.5% யூரியா கரைசல் தெளிக்கப்படுகிறது.
 • 12 நாள் நாற்றுகள் கொண்ட நாற்றுமேடை, சட்டத்துடன் நடவு வயலுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்

நாற்றுநடுதல்
முதல்நடவு

 • வயலின் ஒரு மூலையில் 8 சென்ட் அளவுள்ள சிறிய நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு நடவு செய்ய பண்படுத்தப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு பயிரிட இந்த அளவு போதுமானது. 12 நாள் வளர்ந்த நாற்றுகள் இங்கு நடப்படுகின்றன
 • இந்த சிறிய இடத்தில், ஒரு குத்திற்கு 4 அல்லது 5 நாற்றுகள் வீதம் நடப்படுகின்றன. ஒவ்வொரு குத்திற்கும் இடையே, 15 x 15 செ.மீ இடைவெளி விடப்படுகிறது.
 • நாற்று நடப்பட்ட 15வது நாளில் 0.5% யூரியா கரைசல் தெளிக்கப்படுகிறது.
 • 28 நாட்களில் நெல் நாற்றுகள் நன்கு வேர் பிடித்து, 25 செ.மீ உயரம் வரை வளர்ந்திருக்கும்.

இரண்டாம்நடவு

 • 30வது நாளில், முதலில் நடப்பட்ட குத்துகளிலிருந்து கவனமாக நாற்றுகள் பரித்து, பிரிக்கப்பட்டு, ஒரு நாற்றுக்கும் மற்றொரு நாற்றுக்கும் இடையே 20 x 20 செ.மீ என்ற இடைவெளியில், நடவு வயலில் நடப்படுகின்றன.
 • இந்த வேலையை 15 ஆட்களைக் கொண்டு ஒரு ஹெக்டேருக்கு ஒரே நாளில் செய்யலாம்.

இருமுறைநடவு செய்வதில்உள்ளசாதகங்கள்

 • நாற்றுகள் இழப்புகள் ஏதுமின்றி நன்கு வளர்க்கப்படுகின்றன
 • நாற்றுகள் நன்கு வளர்வதால், களைகளின் வளர்ச்சி குறைவு
 • நாற்றுகள் உயரமாக இருப்பதால், வயலில் நீர் தேக்கத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை நடப்பட்டநாள் முதலே நாற்றுகள் பெறுகின்றன. எனவே, களை கட்டுப்பாட்டிற்கு, வயலில் தண்ணீர் தேக்கி வைக்கும் முறையையும் பின்பற்றலாம்
 • நாற்றுகளைத் தனித்தனியாகப் பிரித்தல் சுலபம்.
 • நாற்றுகள் வேகமாக வேர்ப்பிடித்து, பயிர்களாக உருவெடுக்கின்றன. இதனால், 10வது நாளிலிருந்தே கோனோ-களையெடுக்கும் கருவியைக் கொண்டு வேலை செய்தல் சாத்தியமாகிறது.
 • இந்த முறைக்கென்று தனிப்பட்ட முயற்சியோ அல்லது பயிற்சியோ தேவை இல்லை. ஏனென்றால், விவசாயிகள் நெற்பயிர் சாகுபடிக்கு பின்பற்றும் வழக்கமான முறைகளைப் போன்றே இது உள்ளது.

களைமேலாண்மை
இரண்டாம் நடவு செய்யப்பட்ட நாளிலிருந்து 10வது நாளில், கோனோ-களையெடுக்கும் கருவியை செடிகளுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாக, 3 முதல் 4 முறை முன்னும் பின்னும் செலுத்தி களையெடுக்கலாம். ஒரு முறை களையெடுப்பதே போதும் என்பதால், ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் 10 ஆட்கூலி மிச்சப்படுத்துகிறது.

நீர்பாசனம்
வயல் மண் ஓரளவிற்கு காய்ந்த பிறகு மட்டுமே தண்ணீர் பாயும்படியான நீர்ப்பாசனமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வயலில் ஈரப்பதம் இருக்கும் அதே சமயம், அதிக அளவு நீர் தேக்கம் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுதல் அவசியம். நீர்ப்பாசனத்திற்கு தேவைப்படும் நீரின் அளவை இம்முறை 500 மி.மீ வரை குறைக்கிறது.

உரம்இடுதல்

 • முதலில், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் உரங்கள் அடி உரமாக இடப்படுகின்றன.
 • கோனோ-களையெடுக்கும் கருவி கொண்டு களை எடுத்த 15வது நாளில், 30 கிலோ யூரியா இடப்படுகிறது.
 • முப்பதாவது நாளில் மீண்டும் ஹெக்டேருக்கு 30 கிலோ யூரியா இடப்படுகிறது.
 • 45வது நாளில், ஹெக்டேருக்கு 30 கிலோ யூரியாவுடன், 30 கிலோ

பொட்டாஷ் இடப்படுகிறது.

குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் கதிரமங்கலம் கிராமத்தில் வேளாண் விரிவாக்க அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ள திரு ராஜேஷ் குமார் மற்றும் திரு சவுரவ் நாயக் அவர்களால் அளிக்கப்பட்டவை.இளங்கலைப் பட்டதாரியான திரு எஸ்.கோபால் அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய செம்மை நெல் சாகுபடி முறைதமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தத் தக்க வகையில்உள்ளது என இவ்விரு அதிகாரிகள் சான்று அளித்துள்ளனர்.

மூலம் : http://ciifad.cornell.edu/sri/countries/india/
kadiramangalam.html

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்