விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நம்பிக்கையூட்டும் காடுகள்

மேற்கு வங்காளத்தின், பிர்பமின், இராஜ்நகர் பிளாக்கில் உள்ள கிராமம் நாராயணபூர், ஆகும். இங்கு வெயில் காலங்களில், நாய்கள் கூட நீண்ட பயனம் செய்ய அஞ்சும். ஏனென்றால், நிழலில் நிற்பதற்கு, ஒரு மரம் கூட இங்கில்லை. ஜனவரி 2008ல், நாரயணபூர் சிஷு சமித்தி (NSS), தொடங்கப்பட்டது.

இது, 40 ஏக்கர் செம்மண் வகை கொண்ட தரிசு நிலத்தை, தன் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் கால்நடைகளை மேய விடும், புல் நிலமாக உபயோகிக்க பட்டு வந்தது. சமித்தி, 12 நிலமற்ற மற்றம் 4 குறுநில மலைவாழ் விவசாயிகளைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தது. இந்நிலத்தை கிராமத்திற்கு உதவும் சொத்தாக மாற்றுவதற்கு, இந்த நிலத்தில் பழ மரங்கள், தீவன பயிர்கள், விறகுக்கு பயன்படும் மரங்களை நட்டனர். இம்மரங்களுக்கு இடையில், குறுகிய கால பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தனர். இந்த நிலத்தில் வளரும் மரங்களிலிருந்து வரும் வருமானத்தில், 50 % தரிசு நிலத்தின் சொந்தகாரர்களக்கும், மேலும் 50 %, இந்நிலத்தை பாதுகாக்கும் குழுவுக்கும் கொடுக்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் ஊடுபயிர் வருமானத்தை தங்களுக்குள் சமமாக பகிர்ந்து கொள்வார்கள். ஏப்ரல் 2008ல் நாற்றங்காலில், செடியை உற்பத்தி செய்வதை, இந்த குழு ஆரம்பித்தது. சமுதாய பங்கேற்புடன் 36 மரவகைகள் தேர்ந்து எடுக்கப்பட்டது. உற்பத்தி செய்த 26,000 மரக்கன்றுகளில் 19150 கன்றுகளை நட்டனர். 4000 மரக்கன்றுகளை விற்பனை செய்தனர். மீதமுள்ளதை, வட்டார மக்களுக்கு பகிர்ந்து அளித்தனர்.

மண் மற்றும் நீர் பாதுகாப்பு முறையினால் அடுத்த மழைகாலத்திற்குள் மண்வளம் முன்னேற்றம் ஏற்பட்டது. புல் மற்றும் களைகள் தானாகவே முளைக்க தொடங்கின. இப்பகுதியைச் சுற்றி 4 பக்கமும் வரப்புடன் கூடிய நீர் தேக்க குழிகள், 50 அரைவட்ட வரப்புகள் மற்றும் 5 கல் வரப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் 1342 ஆள் தின அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. மக்காச் சோளம், சுரக்காய், கிட்னி பீன்ஸ் போன்ற நடுத்தர வயது பயிர்களும் மற்றும் துவரை, சபைபுல் ரொசல் போன்ற அதிக நாள் பயிரையும் நடட வேலை ஆரம்பிக்கப்பட்டது. வண்டல் மண், தொழுஉரம் மற்றம் வேப்பம் புண்ணாக்கு போன்றவைகள் உரமாக இடப்பட்டது. பாதுகாப்பிற்காக, பனை, பேரிச்சை, துவரை, ரோசல் போன்ற உயிர் அரண்கள் எழுப்பப்பட்டது. குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்து, சமுதாய பாதுகாப்பிற்கும் வேலை செய்தனர். கரீஃப் கால இறுதியில், 150 கிலோ காய்கறி, 15 கிலோ மக்காச் சோளம், 200 கிலோ ரோசல் மற்றும் 250 கிலோ தீவணப்புள் ஆகியன அறுவடை செய்யப்பட்டது. அங்குள்ள குடும்பங்களே பெரும்பாலானவைகளை பயன்படுத்தின. சில புல் மற்றும் களைகள், கைவினைப் பொருள்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு இடு பொருளாக அமைந்தன. இதனால் கொஞ்சம் அதிகப்படியான வருமானமும் கிடைத்தது.

ஆரம்ப முதலீடு, ரூபாய் 2.5 இலட்சமாகும். இதில் 30% அங்குள்ள மக்களே வேலையாட்களாக முதலீட்டில் பங்களித்தனர். 16 குடும்பங்களுக்கு சராசரியாக 155 தினங்கள் வேலைக் கிடைத்தது.

பருவகாலப் பயிர்கள், அடிப்படை காய்கறி தேவையை பூர்த்தி செய்தது. தரமான தீவணப்பயிர் உற்பத்தி செய்யப்பட்டது. அழியும் தருவாயில் இருந்த மரங்கள் உருவாக்கப்பட்டு பல்லுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்தியது. துடப்பம் தயாரித்தல், ரோசல் ஜாம் தயாரிப்பு போன்றவை வருமானத்தை கொடுத்தது. அருகாமையில் உள்ள 3-4 கிராமங்களில் உள்ள மக்கள், இதைப் போன்ற செயல்பாட்டை தங்கள் கிராமத்தில் புரிவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த செயல்பாட்டுக்கு, உதவி புரிந்தது, கிருஸ்டியன் எய்டு ஆகும்.

மூலம் : DRCSC செய்திகள், வெளியீடு எண், 3

நன்றி : indg.in

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்