இயற்கை இறால் வளர்ப்பு- ஒரு விவசாயியின் அனுபவம்
பிற்பகல் 3:03 இயற்கை இறால் வளர்ப்பு- ஒரு விவசாயியின் அனுபவம் Admin
நல்ல நீர் வசதி மற்றும் செழிப்பான நன்செய் நிலப்பரப்பு கொண்டது கேரளாவில் உள்ள குட்டநாடு பகுதி. நெல் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற இடம். ஆனால், இந்த நிலைமை தற்போது மாறிவிட்டது. அதிக முதலீடு, கூலியாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமை ஆகியவை, இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் சவால்கள்.
குறைவாக செலவாகும் மாற்று சாகுபடி முறைகளை விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலையில், இயற்கை நெல் விவசாயியான திரு ஜோஸஃப் கோரா, தன்னுடைய நான்கு ஹெக்டேர் நிலத்தில் இயற்கை முறையில் இறால் வளர்த்து விற்பனை செய்வதில் முதன்முதலில் ஈடுபட்டார்.
முன்னேற்றத்திற்கான மாற்றம்
கடற்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) மற்றும் இதர மேம்பாட்டு அமைப்புகள் இவருக்கு இயற்கை மீன் வளர்ப்பும் அதற்கு ஏதுவான இறால் வகை பற்றிய யோசனைகளை முன்வைத்தன. அவரும் அவற்றை முயன்று பார்க்க முடிவு செய்தார். சுமார் பதினோரு லட்சம் இறால் குஞ்சுகளை தன்னுடைய நான்கு ஹெக்டேர் நிலத்தில் வளர்க்கத் தொடங்கினார். இந்த முனைப்பில் குஞ்சுகள் ஏற்பாடு, அவற்றிற்கான உணவுகள், ஆலோசனை மற்றும் நேரில் வந்து பார்வையிடுதல் ஆகிய பல வகையிலான உதவிகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டன. ஏழு மாதங்களுக்குப் பின், சுமார் 1,800 கிலோ எடைகொண்ட, (ஒவ்வொன்றும் சுமார் 30 கிராம் எடை) இறால்கள் இவருடைய நான்கு ஹெக்டேர் நிலத்தில் விற்பனைக்குத் தயாராக வளர்ந்தன.
மேலும் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:
திரு ஜோஸஃப் கோரா,
கரிவெலித்தாரா, ராமன்கரை,
தபால்பெட்டி எண்: 689595
குடட நாடு, ஆலப்புழை,
தொலைபேசி எண்: 0477-2707375
கைபேசி எண்: 9495240886
திரு ஆர் ஹாலி,
தொலைபேசி எண்: 04070 - 2622453
கைபேசி: 9947460075
ஆதாரம் : தி இந்து, ஜனரி 8, 2009

குறிச்சொற்கள்: இயற்கை இறால் வளர்ப்பு- ஒரு விவசாயியின் அனுபவம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது