விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கரும்பு சாகுபடிதமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி செய்யும் பருவங்கள் 1) முன்பட்டம் - டிசம்பர் - ஜூலை, 2) நடுப்பட்டம் - பிப்ரவரி - மார்ச், 3) பின்பட்டம் - ஏப்ரல் - மே. தலைப்பட்டம் - ஜூன், ஜூலை.கோ.சி.6 என்ற கரும்பு ரகம் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 2005ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் அதிக கரும்பு மகசூல் 148 டன் /எக்டர்; சர்க்கரைச் சத்து 12.6 சதம், வேர்அழுகல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி, பருமனான நிமிர்ந்த கரும்பு பூக்காத தன்மை, களர் / உவர்

நிலங்களுக்கு ஏற்றது. மறுதாம்பு பயிரில் சிறந்த மகசூல்.நடவு : கரும்பு நடவு 4 அடி இடைவெளியில் செய்தால் பவர் டில்லர் கொண்டு களை எடுக்க, மண் அணைக்க மற்றும் இயந்திர அறுவடை செய்ய முடியும். கரும்பு நடவு 5 அடி 2 அங்குலம் இடைவெளியில் செய்தால் மினி டிராக்டர் கொண்டு களை எடுக்க மண் அணைக்க மற்றும் இயந்திர அறுவடை செய்ய இயலும்.விதைக்கரணை: நோய் மற்றும் பூச்சி தாக்காத 6 முதல் 7 மாத விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். ஒரு எக்டர் நடவு செய்ய 75,000 இருபரு கரணைகள் தேவை. நடவு செய்த அன்றோ அல்லது மறுநாளோ மேட்டுப்பாத்தியில் அல்லது நடவு வயலில் வளர்க்கலாம். ஓரத்தில் ஒற்றை புல் நடவு செய்து அதனை பயன்படுத்தி நடவு வயலில் போக்கிடங்களை நடவு செய்த 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.உரமிடுதல்: அடியுரமாக தொழு உரம் 12.5 டன் அல்லது கரும்பாலை அழுக்கு மக்கியது 10 டன் அல்லது சாண எரிவாயு கழிவு 6.25 /எக்டர்; மணிச்சத்து 112.5 கிலோ/ எக்டர் இட வேண்டும். தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே 275:112 கிலோ/எக்டர் என்ற அளவில் 3 சமமாகவோ பிரித்து நடவு செய்த 30, 60, 90வது நாள் இட்டு மண் அணைக்க வேண்டும்.உயிர் உரம் : அசோஸ்பைரில்லம் 2.4 கிலோ (12 பொட்டலம்), 25 கிலோ தொழு உரம் + 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30, 60, 90வது நாட்களில் செடிகளுக்கு அருகில் வைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.ஊடு பயிர் : உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு விதைக்கலாம் மற்றும் சணப்பை, தக்கைப்பூண்டு விதைத்து 45 நாட்களில் மடக்கி மண்ணில் அழுத்திவிடலாம்.களைக்கொல்லி: கரும்பு தலைப் பயிருக்கு களையைக் கட்டுப்படுத்த 1 எக்டருக்கு 2 கிலோ அட்ரசினை 500 லிட்டர் தண்ணீர் கலந்து நடவு செய்த 3வது நாள் விசிறி அல்லது "டிப்னாலிக்டர் நாசில்' பொருத்தப்பட்ட விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம். கரும்பில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்தால் பெண்டி மெத்தலின் 1 கிலோ/எக்டர் அல்லது அலக்குளோல் 2 கிலோ / எக்டர் என்ற அளவில் மேற்கூறிய முறையில் தெளித்து களையைக் கட்டுப் படுத்தலாம்.தோகை உரித்தல் : கரும்பு நடவு செய்த 150வது மற்றும் 210வது நாளில் காய்ந்த தோகை உரிக்கும் கருவி கொண்டு ஆலைக்குச் செல்லும் கரும்புகளுக்கு செய்ய வேண்டும்.முதிர்ச்சி: முன்பட்டக் கரும்பு ரகங்கள் 11 மாதத்தில் முதிர்ச்சி அடையும். 18 - 20 சதம் பிரிக்ஸ் அளவு கரும்பு முதிர்ச்சிக்கு அறிகுறி. தகவல்: ச.பன்னீர்செல்வம், கே.பாக்கியராஜ், கரும்பு ஆராய்ச்சி நிலையம் - 639 115.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்