விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கரும்பு விலை விவகாரத்தால் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்புFirst Published : 19 Nov 2009 02:57:35 PM IST by dinamani


புதுதில்லி, நவ.19: கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான அரசின் புதிய கொள்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் குரல்கொடுத்ததால் மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.கரும்பு விலை தொடர்பான அரசு உத்தரவை வாபஸ் பெறக்கோரி சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இதையடுத்து மக்களவை முதலில் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.நண்பகலில் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமெழுப்பியதால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் சமாஜவாதிக் கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.2009-10 ஆம் ஆண்டுக்கான கரும்பு விலை குவிண்டாலுக்கு ரூ.129.85 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மாநில அரசுகள் கூடுதலாக அளிக்க விரும்பினால் தங்களின் சொந்த நிதியிலிருந்து அளிக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.விவசாயிகள் கரும்புக்கான விலையை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் மத்திய அரசின் இப்புதிய உத்தரவுக்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்