விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

வேளாண்மையை இயந்திரமயமாக்கல் திட்டம்: ரூ.4.15 மானியத்தில் வேளாண் கருவிகள்

திருநெல்வேலி:வேளாண்மையை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் நெல்லையில் 4.15 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் வேளாண்மையை எந்திரயமாக்கல் திட்டத்தின் கீழ் 60 பல்வேறு வகையான எந்திரங்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க 2009-10ம் நிதி ஆண்டில் 26.75 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான 88 வேளாண் இயந்திரங்களும், உபகரணங்களும் 38.975 லட்சம் மானியத்தில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பருவ மழை குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பை குறைத்திடும் வகையில் 18 வேளாண்மை இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க 7.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 19.80 லட்சம் நிதியில் 43 பல்வேறு வகையான இயந்திரங்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி வேளாண்மை இன்ஜினியரிங் துறை மூலம் மாதாபுரம் கோபாலகிருஷ்ணனுக்கு நெல் அறுவடை இயந்திரம், பாளை ஹெப்சிபா, ராதாபுரம் ஆறுமுகத் தேவர் ஆகியோருக்கு 2 விசை தெளிப்பான்கள் 4.15 லட்சம் மானியத்தில் கலெக்டர் ஜெயராமன் வழங்கினார்.இதில் நெல்லை செயற்பொறியாளர் சந்திரன், சேரன்மகாதேவி வேளாண்மை இன்ஜினியரிங் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, இன்ஜினியர்கள் நடராஜன், ஜான் கிறிஸ்டோபர், ஜான் ஜெயக்குமார், ராஜகோபால், மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...