சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம்: விவசாயிகள் எதிர்ப்பு
பிற்பகல் 7:00
சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம்: விவசாயிகள் எதிர்ப்பு
Admin
ஈரோடு, டிச.14: சுத்திகரிப்பு செய்யப்பட்டாலும் சாயக்கழிவு நீரை கடலில் கலக்க அரசு அனுமதி வழங்ககூடாது என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாவட்ட தலைவர் ஈ.ஆர்.குமாரசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது:சாயக்கழிவு காரணமாக நொய்யல் ஆறும் அதனை சார்ந்த விவசாய நிலங்களும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கழிவுநீரை மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்து ஆலைகளே மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.சாயக்கழிவு நீர்நிலைகளில் கலப்பதன் மூலம் மாசு ஏற்பட்டு பல்வேறு இழப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாயக்கழிவை கடலில் கலக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது.மேலும் படிப்படியாக மனித பேரழிவை ஏற்படுத்தும் சாய ஆலைகள் தமிழகத்தில் செயல்பட தடைவிதிக்கவேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிககும்பட்சத்தில் துணி ஏறறுமதிக்கும் அரசு தடைவிதிக்க வேண்டும்.அப்போது தான் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் துணி கிடைக்கும் என்றார்.
குறிச்சொற்கள்:
சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம்: விவசாயிகள் எதிர்ப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்