விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கணிசமான லாபம் தரும் முட்டைக்கோஸ் ராசிபுரம் விவசாயிகள் ஆர்வம்

ராசிபுரம்: முட்டைக்கோஸ் மூலம் கணிசமான லாபம் கிடைப்பதால், ராசிபுரம் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனர். பருவ காலச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மழை பொய்த்து வறட்சியான சூழல் நிலவுகிறது. அதனால் விவசாயமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே வறட்சியை தாங்கிப் பிடித்து வளரும் பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.


அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய முட்டைக் கோஸை ராசிபுரம் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனர். நாமகிரிப்பேட்டை, மெட்டலா, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் புறங்களில் முட்டைகோஸ் கணிசமான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நான்கு மாதம் விளையக்கூடிய முட்டைகோஸ் உரிய பராமரிப்பு செய்வதன் மூலம் நல்ல மகசூல் ஈட்ட முடிகிறது. ஏக்கர் ஒன்றுக்கு பத்து டன் வரை முட்டைக் கோஸ் கிடைக்கிறது. தற்போது ஒரு டன் முட்டைக்கோஸ் 7,000 - 8,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளும் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.


மூலப்பள்ளிபட்டி விவசாயி அண்ணாமலை கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் குறைந்த அளவு தண்ணீரில் விவசாயம் செய்யக்கூடிய மாற்று பயிருக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவரவர் மண் வளத்திற்கு ஏற்ப விவசாயிகள் மாற்று பயிர் செய்து வருகின்றனர்.


நாமகிரிப்பேட்டை முதல் முள்ளுக்குறிச்சி வரை முட்டைக்கோஸ் அதிகளவு பயிரிடப் பட்டு வருகிறது. ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட்டு, அவை நன்கு பராமரிப்பு செய்வதன் மூலம் பத்து டன்னுக்கு மேல் முட்டைகோஸ் கிடைத்து வருகிறது. இவை ஒரு ஏக்கர் பயிர் செய்வதற்கு அதிகபட்மாக 20 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைகோஸ் மெட்டாலாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


ஒரு டன் முட்டைக்கோஸ் 7,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறன்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைக்கோஸ் திருச்சி மாவட்டத்திற்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், தற்போது நிலவி வரும் வறட்சியான சூழலில் முட்டைகோஸ் விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிராக மாறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...