விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கருவேப்பிலை விலை இனிக்கிறது : விவசாயிகள் முகத்தில் மறுமலர்ச்சிபல்லடம்: மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் இருந்து கருவேப்பிலை வரத்து குறைவால், திருப்பூர், கோவை மார்க்கெட்டில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது; பல்லடம் பகுதி கருவேப்பிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல்லடம் பகுதியில் சித்தம்பலம், ஆலூத்துப்பாளையம், வெங்கிட்டாபுரம், காளிவேலம்பட்டி, கரசமடை, எலவந்தி, சுக்கம்பாளையம் உட்பட பல இடங்களில், 300 ஏக்கர் பரப்பளவில், கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கருவேப்பிலை பறிப்புக்கு பின், திருப்பூர் காய்கனி மார்க்கெட், உழவர் சந்தை, கோவை மற்றும் கேரள பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை பகுதிக்கு கருவேப்பிலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மலைப்பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்ட பல இடங்களில், தற்போது நீடித்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, கருவேப்பிலைகளில் புள்ளிநோய் தாக்கப்பட்டு, செடியில் இருந்து உதிர்ந்து விளைச்சல் குறைந்துள்ளது. இதன்காரணமாக, மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் இருந்து திருப்பூர், கோவைக்கு வரும் கருவேப்பிலை வரத்து, கடந்த 10 நாட்களாக கணிசமாக சரிந்துள்ளது. மேட்டுப்பாளையம், காரமடையை ஒப்பிடும் வகையில், பல்லடம் பகுதியில் பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாத காரணத்தால், புள்ளிநோய் மற்றும் பனிக்கருகலில், கருவேப்பிலை பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கவில்லை. மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் இருந்து திருப்பூர், கோவை பகுதிக்கு கருவேப்பிலை வரத்து சரிந்ததால், திருப்பூர், கோவை மார்க்கெட்டுகளில் பல்லடம் பகுதியில் உள்ள கருவேப்பிலைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன், பல்லடம் பகுதி கருவேப்பிலை சாகுபடி விவசாயிகளிடம் ஒரு கிலோ கருவேப்பிலை ஒன்பது ரூபாய்க்கு கொள்

முதல் செய்யப்பட்டது; தற்போது கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்து, 14 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு வாரத்தில் கருவேப்பிலை கொள்முதல் விலை 60 சதவீதம் உயர்வு, பல்லடம் பகுதியில் கருவேப்பிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...