விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம் கடைபிடித்தால் இரட்டிப்பு லாபம்

நாமக்கல்: "விளை பொருட்களை சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களை கடைபிடித்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம்' என, வேளாண் இணை இயக்குனர் துரை பேசினார்.உழவர் பயிற்சி நிலையம் சார்பில், உழவர் விவாதக்குழு அமைப்பாளருக்கான கிராம அடிப்படை பயிற்சி முகாம், பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் தலைமை வகித்து, மக்காச்சோளம் சாகுபடி மற்றும் செம்மை நெல் சாகுபடி குறித்து விளக்கினார்.வேளாண் இணை இயக்குனர் துரை பேசியதாவது:
விளைபொருட்களை சந்தை படுத்துவதில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம். விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களது விளைபொருட்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பலாம். அதன் மூலம் இடைத்தரகர்களுக்கு செல்லும் பணம் நமக்கே கிடைக்கிறது. கூட்டு விற்பனை மற்றும் ஒற்றுமை உணர்வு இருந்தால், தங்களது விளை பொருட்களுக்கு தாங்களே விலையை நிர்ணயம் செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார். வணிக வேளாண் துணை இயக்குனர் சுப்ரமணியம், தேசிய வேளாண் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி, பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் வீரப்பன், நடமாடும் மண் ஆய்வுக்கூட வேளாண் அலுவலர் ஜெயக்குமார், தோட்டக்கலை துணை அலுவலர் மாணிக்கம் ஆகியோர் தத்தமது துறைகளை பற்றி விளக்கினர். கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் தனவேல், கால்நடை பராமரிப்பு குறித்தும், அக்ரி கிளினிக் இயக்குனர் பிரசன்னம், நவீன வேளாண் பற்றியும் எடுத்துரைத்தனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் அன்புச்செல்வி, துணை வேளாண் அலுவலர் சவுந்திரமேகலை ஆகியோர் செய்திருந்தனர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...