விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கொய்மலரில் புதிய வரவான 'கேலாலில்லி'

தாண்டிக்குடி: கொய்மலரில் புதிய வரவான "கேலாலில்லி' உற்பத்தி செய்ய விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் பொக்கே தயாரிக்க பயன்படும் கொய்மலர் வகைகளில் புதிய வகையான"கேலாலில்லி' சோதனை அடிப்படையில் பராமரிக்கப்பட்டு நன்கு பூத்துள்ளது. ஹாலந்து நாட்டிலிருந்து தாய்கன்றுகள் புனேக்கு கொண்டு வரப்பட்டு நமது தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தாற் போல் மாற்றப்பட்டு மலைப்பிரேதசங்களான ஊட்டி, கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிக்கு தேவைக்குகேற்ப அனுப்பப்படுகிறது. இந்த "கேலாலில்லி' 30 வகைகள் உள்ளன. பல வண்ணங்களில் பூக்கும் தன்மையுள்ள இவற்றிற்கு மார்கெட்டில் தனி மதிப்பும் விலையும் அதிகம். நடவு செய்த 60-வது நாளில் பூத்து தொடர்ந்து இரண்டு ஆண்டு பலன் தரும். ஆண்டுக்கு 10 பூக்கள் மட்டுமே பூக்க வல்லது. பசுமைக்குடில் மற்றும் திறந்த வெளியில் வளரும் தன்மை கொண்டது. பறிக்கப்பட்ட பூ இரு வாரங்கள் வாடாமல் இருக்கும். இவ்வகை பூக்கள் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் நிற பூ விற்கு அதிக கிராக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தாண்டிக்குடியில் சோதனை அடிப்படையில் பராமரிக்கப்பட்டு பூக்கள் நன்கு வளர்ந்துள்ளதால் விவசாயிகளிடையே கேலா லில்லி வளர்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது.ஒரு பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

1 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

 1. Dear Sir,

  We are offering Calla Lily (Zantedeschia), Asiatic, Oriental lily, Tulips, Gladiolus cut flowers production technology and latest plant varieties of calla lily which are produced under TISSUE CULTURE in India.

  For further information contact

  Chinnadurai
  09769802204
  hortichinna@gmail.com

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...