விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விவசாய மின் மோட்டார்களை மாற்றிக்கொள்ள மானியம்

பொள்ளாச்சி : விவசாயத்திற்கு பயன்படுத்தும் பழைய மின்மோட்டார்களை புதிதாக மாற்றி அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி அடுத்த சின்னநெகமத்தில் உழவர் மன்றம் சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நெகமம் யூனியன் வங்கி கிளை மேலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். உழவர் மன்ற செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். உழவர் மன்ற தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுரேஷ் பேசியதாவது: விவசாயத்திற்கு பயன்படுத்தும் பழைய மின் மோட்டார்களை மாற்றி, புதிய மின் மோட்டார்களை வாங்க அதன் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.டிராக்டர் புதிதாக வாங்க (40 எச்பி., க்கு குறைவாக), பவர் டில்லர் வாங்க மானியமாக 45 ஆயிரமும், மினி டிராக்டர் வாங்க 1.25 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது.மேலும், பண்ணைக்கருவிகளுக்கு 33 சதவீதமும், சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைக்க 65 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் பொறியியல் துறையில் வாடகைக்கு டிராக்டர் மணிக்கு 275 ரூபாய்க்கும், செயின் புல்டோசர் மணிக்கு 675 ரூபாய்க்கும், பாறை வெடிக்கும் கருவி நாள் ஒன்றுக்கு 250 ரூபாய்க்கும் வாடகைக்கு விடப்படுகிறது. வேளாண் பொறியியல் துறையின் மானிய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, உதவி பொறியாளர் பேசினார். உழவர் மன்ற அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...