.ஏற்றுமதி தேவையுள்ள மிளகாய் வற்றல் பயிரிட்டு லாபம் அடைய வேளாண் அதிகாரிகள் யோசனை
முற்பகல் 12:01 .ஏற்றுமதி தேவையுள்ள மிளகாய் வற்றல் 0 கருத்துகள் Admin
கடலூர் : இந்தியாவின் மிளகாய் வற்றலின் ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதால் மிளகாய் பயிர் செய்து லாபம் ஈட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து வேளாண் இணை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வடகிழக்குப் பருவமழையை எதிர் நோக்கி மிளகாய் விவசாயிகள் விதைப்பு செய்யலாமா, ஜனவரி-பிப்ரவரி 2010ல் நல்ல விலை கிடைக்குமா என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத்தகவல் மையமானது, மிளகாய் உற்பத்தி செய்யும் மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், பரமக்குடி மற்றும் சென்னை மிளகாய் வியாபாரப் பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டது.
உலகில் மிளகாய் வற்றல் உற்பத்தியிலும், நுகர்விலும் இந்தியா முதன்மை நாடாக விளங்குகிறது.உலக மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் இந்தியா 36 சதவீதம் பங்கு வகிக்கிறது.தொடர்ந்து சீனா, பங்களாதேஷ் பெரு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மிளகாய் வற்றல் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றன. மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திரப்பிரதேசம் முதல் மாநிலமாகும். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே 13, 9, 7 மற்றும் 2 சதவீதம் பங்குகள் வகிக்கின் றன.
தமிழ்நாட்டில் மிளகாய் வற்றல் 2007-08ல் 67 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 9.83 சதவீதம் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் மிளகாய் வற்றலின் ஏற்றுமதித் தேவை அதிகரித்து வருகிறது. எனவே மிளகாய் விவசாயிகள் நல்ல விலை கிடைக்க வடகிழக்கு பருவமழைக் காலத்தில் முறையான பயிர் மேலாண்மையை கடைபிடித்து மிளகாய் வற்றல் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.

குறிச்சொற்கள்: .ஏற்றுமதி தேவையுள்ள மிளகாய் வற்றல்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...