ஸ்பிக் ஆலையை மீண்டும் இயக்க உறுதியான நடவடிக்கை தேவை
பிற்பகல் 7:06
ஸ்பிக் ஆலையை மீண்டும் இயக்க உறுதியான நடவடிக்கை தேவை
Admin
தூத்துக்குடி, டிச. 14: ஸ்பிக் உரத் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக மத்தியஅமைச்சர் மு.க. அழகிரியின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது என, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலர் க. கனகராஜ் வெளியிட்டுள்ளஅறிக்கை: ஸ்பிக் மற்றும் டாக் ஆலைகளை திறக்க முயற்சி எடுத்து வருவதாகவும், முதல்வர் கருணாநிதிஇதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஸ்பிக் நிறுவன தலைவர் தன்னுடன்தொடர்புகொண்டு பேசி வருவதாகவும், எனவே, இந்த ஆலைகளை மிக விரைவில் மீண்டும் இயக்கநடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிதெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையில் விவசாயம், தொழில், தொழிலாளர் நலன்,தூத்துக்குடியின் பொருளாதாரம் என்ற கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் அளிப்பதாகத்தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கான விஷயமாகவே இதைப் பயன்படுத்துகின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்,தேர்தலுக்கு பின்னர் உடனடியாக ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார். தற்போது திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி இத்தகைய அறிவிப்பை அமைச்சர் மு.க.அழகிரி வெளியிட்டுள்ளார். ஸ்பிக் நிறுவனத்தின் மொத்த நஷ்டம் ரூ.1755 கோடியை எப்படி ஈடுகட்டப் போகின்றனர்?நிறுவனத்தின் மொத்த சுமை, மொத்த சொத்து மதிப்பைவிட ரூ.1090 கோடி அதிகம். இதேபோன்ற நிலை 2003-ல் ஏற்பட்டபோது நிறுவன கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 19.3.2003-ல்ரூ.41 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு, குறுகிய கால கடன்கள் நீண்டகால கடன்களாகவும், வட்டிவிகிதங்களைக் குறைத்தும் சலுகை காட்டப்பட்டது. அதன்பிறகும் அந்நிறுவனம் கடன் சுமையில்இருந்து மீளவில்லை. நிறுவன கடன் சீரமைப்புத் திட்டத்தின்படி கட்ட வேண்டிய ரூ.905 கோடி முதலும், அதற்கானவட்டியும் கட்டப்படாமல் உள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலன், தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம்வழங்க வேண்டிய தேவை, தூத்துக்குடியின் பொருளாதார நலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு,அரசே இந்நிறுவனத்தை ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றார் அவர்.
குறிச்சொற்கள்:
ஸ்பிக் ஆலையை மீண்டும் இயக்க உறுதியான நடவடிக்கை தேவை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்