விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மார்ச் வரை காத்திருங்க... : மக்காச்சோளம் லாபம் தரும்

"மக்காச்சோளம் விலை அடுத்த ஆண்டு மார்ச்சுக்கு பின் அதிகரிக்கும் என்பதால், ஆறு மாதம் வரை சேமித்து, பின்னர் விற்கலாம்' என, வேளாண் பல்கலையிலுள்ள உள் நாடு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
தகவல் மைய அறிக்கை: இந்தியாவில் மக்காச்சோள சாகுபடி பரப்பு 70.47 எக்டர் அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தை விட 1.04 சதவீதம் அதிகம். அதிகமாக விளையும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் அதிகளவில் கொள்முதல் செய்வதால், தமிழக வியாபாரிகளுக்கு குறைந்த அளவே கிடைக்கிறது. இது, தமிழகத்தை வந்தடையும் கர்நாடக மக்காச்சோளத்தின் விலையை, குவிண்டாலுக்கு 950 ரூபாய் உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் 54 சதவீத மக்காச்சோளம் ஆடிப்பட்டத்தில் விதைக்கப்படுகிறது. கடந்த ஜூன், ஜூலையில் போதுமான மழை இல்லாததாலும், ஆகஸ்ட், செப்டம்பரில் அதிகளவில் பெய்ததாலும் ஆடிப்பட்ட மக்காச்சோள பரப்பு குறைந்துள்ளது. தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் மக்காச்சோளத்தை உடனே விற்பதா, சேமித்து வைப்பதா, என விவசாயிகள் குழம்புகின்றனர். தீர்வு காண வேளாண் பல்கலையின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தை தகவல் மையம் ஆய்வு நடத்தியது.
தமிழகத்தின் சில பகுதிகளில் அதிக வரத்து இருந்தபோதும், அதிக ஈரப்பதம் காரணமாக மணிகளின் தரம் எதிர்பார்த்த அளவு இல்லை; டிசம்பர் இறுதியில் வரத்து அதிகரிக்கும். கோழிப்பண்ணை நிறுவனங்கள் மக்காச்சோளத்தை இருப்பில் வைக்க அதிகளவில் கொள்முதல் செய்வர். ஆகவே, விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு குறைவு. வரத்தை விட தேவை அதிகமாக இருப்பதால், மார்ச் மாதத்துக்குப் பின் பற்றாக்குறை ஏற்பட்டு, குவிண்டாலுக்கு 1,000 ரூபாயை தாண்டும்; விலையும் ஏறுமுகத்தில் இருக்கும். மக்காச்சோளத்தை சேமித்து வைத்து மார்ச்சுக்கு பின் விற்கலாம்.
தனியார் கோழிப்பண்ணைகள் குவிண்டாலுக்கு 940 ரூபாய் தருகின்றன. நூறு கிராம் மக்காச்சோளத்தில் 350க்கு குறைவான மணிகள் இருந்தால் அதிக விலை கிடைக்கும். எதிர்வரும் தைப்பட்டத்தில் விவசாயிகள் மக்காச்சோளத்தை விதைத்தால், தற்போதைய சந்தை நிலவரங்கள் நீடிக்கும் பட்சத்தில் அறுவடை நடைபெறும் 2010 மே, ஜூன் மாதங்களில் குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...