காட்டெருமையிடம் பாசம் காட்டும் கொடைக்கானல் விவசாயி
பிற்பகல் 11:54 காட்டெருமையிடம் பாசம் காட்டும் கொடைக்கானல் விவசாயி 0 கருத்துகள் Admin
கொடைக்கானல் : கொடைக்கானலில் காட்டெருமையை தன் வசப்படுத்தி விவசாயி ஒருவர் பழகி வருகிறார். கொடைக்கானல் செண்பகனூர் வனப்பகுதி, பேரி தோட்டத்திற்கு காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக வரும். இவை விளை நிலங்களை நாசம் செய்யும். தடுப்பவரை விரட்டி முட்டும். வீட்டில் வளர்க்கும் எருமை போல காட்டெருமையுடன் மனிதர்கள் பழக முடியாது. இந்த காட்டெருமையில் 12 வயதுடைய ஆண் எருமை ஒன்று உணவு தேடி வந்த இடத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் கிடந்தது. இதை பார்த்த செண்பனூரை சேர்ந்த ஜான், அதற்கு உதவ முயன்றார்.அவரிடம் எருமை தனது வழக்கமான சுபாவத்தை காட்டியது.இருந்தும் ஜான், ஒருவாரமாக புல், காரட்டை உணவாக கொடுத்தார். எருமை தற்போது நிற்க ஆரம்பித்துள்ளது. காட்டெருமைக்கு தொடர்ந்து உணவு கொடுத்ததால், ஜானுக்கு நண்பராகியுள்ளது.
ஜான் கூறுகையில்," காட்டெருமையின் காயம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.நான் உணவு கொடுக்கும் போது முதலில் திமிறியது, பின்னர் பழகி விட்டது.இப்போது என்னை தவிர வேறு யாராவது சென்றால் ஆபத்து தான்.என்னுடன் நல்ல நண்பராக பழகி வருகிறது'' என்றார். பாசம் என்பது நாய்க்கும்,பறவைக்கும், பசு மாட்டிற்கு மட்டும் சொந்தமல்ல, முரட்டுத்தனத்துக்கு பெயர் போன காட்டெருமைக்கு உண்டு என்பதை இது காட்டுகிறது.

குறிச்சொற்கள்: காட்டெருமையிடம் பாசம் காட்டும் கொடைக்கானல் விவசாயி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...