விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நெல் பயிரில் இலை மடகுப்புழு நோயை கட்டுப்படுத்த ஆலோசனைஸ்ரீவில்லிபுத்தூர் : நெல் பயிரில் இலை மடக்குப்புழு தாக்குதல் நோயிலிருந்து பயிர்களை காப்பாற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராமலிங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள பயிர்களில் பொன் மஞ்சள் நிற அந்துப்பூச்சிகள் வயலினுள் பறந்து இலைகளின் பின்புறம் அமர்ந்திருக்கும். இலைகள் வெண்ணிறமாக அரிக்கப்பட்டு சுருட்டப் பட்டிருக்கும். இதனால் பயிர் வெளுத்து புகைந்தது போல் காணப்படும்.
இந்நோய் பொதுவாக மழைக்கு பின் வெயிலடிக்கும் போதும், தழைச்சத்து உரங்களை போட்ட பின்பும், நிழலான பகுதிகளிலும் அதிகம் காணப்படும். மேலும் தொழு உரம் போடும் முன் குவித்து வைத்த இடங்களிலும், தழைச்சத்து கொண்ட உரங்கள் அதிகம் விழுந்த இடங்களில் முதலில் தோன்றும் . இந் நோய் தீவிரமாக பயிர்களில் பரவியிருந்தால் கட்டுப்படுத்த மானோ குரோட்டோபாஸ் ஏக்கருக்கு 400 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் ஏக்கருக்கு 500 மில்லி மருந்தினை பயிர் முழுவதும் படும் படியாக மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
மருந்து கரைசல் இலைகளின் மீது நன்கு படிய சாண்டோவிட், இன்ட்ரான், பைட்டோவெட், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி தெளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...