விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விவசாயிகளுக்கு மீண்டும் மானியத்தில் 'சிங்சல்பேட்'

தேனி: விவசாயிகளுக்கு மீண்டும் ஐம்பது சதவீத மானியத்தில் சிங் சல்பேட் உரங்கள் வழங்கப்பட உள்ளது. பயிர்களில் நுண்ணூட்ட சத்தை அதிகரித்து மகசூலை அதிகரிக்கவும், களர் நிலங்களை மேம்படுத்தவும் விவசாயிகள் சிங்சல்பேட் உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விவசாயத்துறை சார்பில் மானிய விலையில் சிங்சல்பேட் உரங்கள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக இவை நிறுத்தப்பட்டன. இந்நிலையில் விவசாய உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக பல்வேறு மானிய திட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தேசிய விவசாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் மீண்டும் மானிய விலையில் சிங்சல்பேட் உரங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட வாரியாக சிங்சல்பேட் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இவை ஐம்பது சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அனைத்து விவசாய விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் ஐம்பது சதவீதம் மானியத்தில் இவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...