பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க காங்கிரஸ் கோரிக்கை
பிற்பகல் 7:08
பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க காங்கிரஸ் கோரிக்கை
Admin
சென்னை, டிச. 14: கச்சா பருத்தி மற்றும் கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடியல் சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்."நூல் விலை உயர்வு காரணமாக கைத்தறி, விசைத்தறி மற்றும் பனியன் சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கச்சா பருத்தி மற்றும் கழிவு பருத்தி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதே நூல் விலை உயர்வுக்கு காரணமாகும். எனவே அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரை தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும்' என்று முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் விடியல் சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிச்சொற்கள்:
பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க காங்கிரஸ் கோரிக்கை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
இதனைச் சார்ந்த பதிவுகள்