விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பருவ நிலை மாறுபாடு: ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து வரைவு அறிக்கை தயாரிக்க இந்தியா முடிவு

கோபன்ஹேகன், டிச.14: புவி வெப்பமடைவதை தடுக்க வளர்ச்சியடைந்த நாடுகள் ஒத்துழைக்காத நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

பருவ நிலை மாறுபாட்டை தடுப்பது தொடர்பாக கடுமையான நிபந்தனைகளால் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த வரைவு அறிக்கையைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோபன்ஹேகன் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைந்த வரைவு அறிக்கையை பிரேஸில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள், பிரேஸில் மற்றும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளன. ஏற்கெனவே உள்ள வரைவு அறிக்கையில் பிற்சேர்க்கையாக ஆப்பிக்க நாடுகளின் வரைவுத் தீர்மானங்கள் சேர்க்கப்படும். பொதுவான இந்த அறிக்கை இப்போதைக்கு வெளியிடப்படாது என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்