செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் மானிய விலை இடுபொருள் விவசாயிகளுக்கு வினியோகம்
பிற்பகல் 8:25 செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் மானிய விலை இடுபொருள் வினியோகம் 0 கருத்துகள் Admin
நாமக்கல்: "செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள், கருவிகள் வழங்கப்படுகிறது' என, வேளாண் இணை இயக்குனர் துரை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடி செயல் விளக்கத்திடல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் குறைந்த அளவு விதையாக ஏக்கருக்கு மூன்று கிலோ விதை போதுமானது.
குறைந்த நாற்றங்கால் பரப்பு, இளவயது ஒற்றை நாற்று, சதுரநடவு முறை, கோனோவீடர் மூலம் களை எடுத்தல் போன்றவை முக்கிய தொழில் நுட்பங்ளாக எடுத்துக் கூறப்படுகிறது. இந்த முறையை பின்பற்றி செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை மற்றும் இடுபொருட்களும், சதுர நடவுக்கு மார்க்கர், களைகளை எடுக்க கோனோ வீடர் போன்ற கருவிகளும் வழங்கப்படுகிறது. செம்மை நெல் சாகுபடி எனப்படும் முறையில் ஒற்றை நாற்று நடவு செய்யும் அனைத்து விவசாயிகளும் அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: செம்மை நெல் சாகுபடி திட்டத்தில் மானிய விலை இடுபொருள் வினியோகம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...