விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கால்நடைக்கு ஏற்படும் பனிக்கால நோய் தடுப்பு முறை; டாக்டர் விளக்கம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் கால்நடைக்கு ஏற்படும் பனிக்கால நோய் தடுப்பு முறையை பின்பற்ற கால்நடை மருந்தக டாக்டர் விஜயகுமார் அறிவித்துள்ளார். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஆண்டிப்பட்டிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கூடுதலானோர் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது தொடர்மழை காலம் கிட்டத்தட்ட மூன்று பணிகாலம் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் கால்நடைக்கு பல்வேறு நோய், புண் தோன்ற வாய்ப்புள்ளது.

இதன் அடிப்படையில் ஆண்டிப்பட்டிக்கோட்டை கால்நடை மருந்தக டாக்டர் விஜயகுமார் கால்நடை பாதுகாப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். டாக்டர் விஜயகுமார் அறிக்கையில் உள்ளதாவது: தற்போது பெய்த மழையை தொடர்ந்து பிப்ரவரிவரை பெய்யும் பனியால் கால்நடைக்கு ஏற்படும் சிறுகாயம் ஈ மொய்ப்பதால் "ஈ சொத்தை' என்ற புழு தாக்கி கால்நடை உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, காயத்தை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து டிஞ்சர், போரிக்பவுடர், சல்போனா பவுடர் உள்ளிட்ட மருந்து மூலம் குணப்படுத்தலாம். இயற்கை மருந்தாக புண் ஏற்பட்ட இடத்தில் வேப்பஎண்ணெய் தடவலாம். மூக்கணாங்கயிறு போடப்பட்டுள்ள கால்நடைகளுக்கு கயிறை சுத்தப்படுத்தி மூக்கு துவாரப்பகுதியில் உப்புநீர் கொண்டு கழுவ வேண்டும்.

கன்று ஈன்ற பசுக்களின் பின்பகுதியில் ஏற்படும் புண்களை உப்பு, மஞ்சள் கலந்த இளஞ்சூடான நீரில் கழுவ வேண்டும். மேலும், ஏற்படக்கூடிய நோய்களுக்கு பராமரிப்பு முறைகளை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி பயன்பெறலாம். கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும் இலவச சிகிச்சை, மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...