விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை

கடமலைக்குண்டு:விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்துகொள்ளவேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் திலகர் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது; கடமலைக்குண்டு வட்டார பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி, நெல், கரும்பு ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.


விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்வதற்கு ஒரு ஹெக்டர் மக்காச்சோளத்திற்கு 33 ரூபாய், நெல்லுக்கு 103 ரூபாய், பருத்திக்கு 299 ரூபாய், கரும்புக்கு 1195 ரூபாய், பயிர்வகைகளுக்கு 25 ரூபாய் என தொகையை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செலுத்தவேண்டும். கடன் பெறாத விவசாயிகள் பத்து ரூபாய் செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்களை பெற கடமலைக்குண்டு வேளாண்மை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...