விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பஞ்சு ஏற்​று​ம​திக்​குத் தடை இல்லை!

First Published : 15 Dec 2009 11:33:35 AM IST


கோவை,​​ டிச.14: பஞ்சு ஏற்று​ம​திக்​குத் தடை விதிக்​கும் எண்​ணம் மத்​திய அர​சி​டம் இல்லை என்று மத்​திய ஜவு​ளித்​துறை அமைச்​சர் தயா​நிதி மாறன் திட்​ட​வட்​ட​மாக அறி​வித்​துள்​ளார்.​

கோவை அருகே பெரி​ய​நா​யக்​கன்​பா​ளை​யத்​தில் எல்.எம்.டபிள்யூ.​ நிறு​வ​னத்​தின் புதிய கிளையை திங்​கள்​கி​ழமை துவக்​கி​வைத்​தார்.​ பின்​னர்,​​ செய்​தி​யா​ளர்​க​ளுக்கு அவர் அளித்த பேட்டி:​

​ ஜவுளி நிறு​வ​னங்​க​ளில் தொழில்​நுட்ப மேம்​பாடு நிதி திட்​டத்​தின்​கீழ் ​(டப்)​ இது​வரை சுமார் ரூ.2 ஆயி​ரத்து 400 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.​ மேலும் ரூ.1,800 கோடி வழங்க வேண்​டும் என ஜவுளி நிறு​வன அமைப்​பு​கள் கோரிக்கை விடுத்​துள்​ளன.​ இது குறித்து பரிசீ​லிக்​கப்​ப​டும்.​ டப் திட்​டம் தொட​ரும்.​

​ நடப்பு ஆண்​டில் இந்​தி​யா​வில் 295 லட்​சம் பேல்​கள் பஞ்சு உற்​பத்​தி​யா​கி​யுள்​ளது.​ ஏற்​கெ​னவே,​​ 40 லட்​சம் பேல்​கள் இருப்​பில் உள்​ளது.​ உள்​நாட்​டின் தேவை 250 லட்​சம் பேல்​கள்.​ தேவைக்கு அதி​க​மாக பஞ்சு இருப்​ப​தால் தான் ஏற்​று​ம​திக்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது.​ இது​வரை 7 லட்​சம் பேல்​கள் மட்​டுமே ஏற்​று​மதி செய்​யப்​பட்​டுள்​ளன.​ எனவே,​​ பஞ்சு ஏற்​று​ம​திக்கு தடை விதிக்​கும் எண்​ணம் இல்லை.​

இந்​திய பஞ்​சா​லை​களை போல பாகிஸ்​தான்,​​ சீனா,​​ வங்​க​தேச பஞ்​சா​லை​க​ளுக்​கும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது.​

திருப்​பூர்,​​ ஈரோடு மாவட்​டங்​க​ளில் சாயப்​பட்​ட​றை​க​ளில் இருந்து வெளி​யா​கும்

கழி​வு​நீரை கட​லில் கலக்​கும் திட்​டத்​துக்​கான திட்ட அறிக்​கையை தமி​ழக அரசு தயா​ரித்து வரு​கி​றது.​ இதற்​கான நிதி​யில் 60 சத​வீ​தத்தை மத்​திய அரசு வழங்க வேண்​டும் என முதல்​வர் கரு​ணா​நிதி கோரிக்கை விடுத்​துள்​ளார்.​

ஜவுளி ஏற்​று​மதி ஏறு​மு​கத்​தில் உள்​ளது.​ கடந்த ஆண்டை ஒப்​பி​டும்​போது 5 சத​வீ​தம் உயர்ந்​துள்​ளது என்​றார்.​ ஊர​கத் தொழில்​துறை அமைச்​சர் பொங்​க​லூர் நா.பழ​னிச்​சாமி,​​ எல்.எம்.டபிள்யூ.​ நிறு​வன முழு​நேர இயக்​கு​நர் சஞ்​சய் ஜெய​ரத்​தி​ன​வேலு,​​ முதன்மை நிதி அலு​வ​லர் ஆர்.ராஜேந்​தி​ரன் ஆகி​ யோர் உடன் இருந்​த​னர்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்