விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

லாபம் தரும் துலுக்க மல்லி : விவசாயிகள் ஆர்வம்

காளையார்கோவில் : காளையார்கோவில் பகுதி விவசாயிகள் துலுக்க மல்லி சாகுபடியில் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.
இங்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை, நோய் தாக்குதல், மகசூல் குறைவு போன்றவற்றால் காய்கறி விவசயத்தில் வருமானம் குறைந்து வருகிறது. இதனால் ஆர்வம் குறைந்து, விவசாயிகள் மாற்று பயிருக்கு மாறி வருகின்றனர். ஆண்டுரணியை சேர்ந்த பிரான்சிஸ் பத்து சென்ட் அளவில் துலுக்க மல்லி என்ற பூ சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார். மார்கழி மாதம் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அவர் கூறுகையில், ""சாகுபடி செய்த இரண்டாவது மாதத்தில் பூக்க துவங்கி விடும். தொடர்ந்து மூன்று மாதம் வரை பலன் தரும். குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறது. குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். வேலை ஆட்கள் தேவையில்லை. நோய் தாக்குதல், கால்நடைகளால் ஆபத்து போன்ற பிரச்னைகள் இல்லை. நல்ல லாபம் கிடைப்பதால் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பயிரிடுகிறேன். காய்கறிகளும் உற்பத்தி செய்து வருகிறேன். சந்தையின் தேவைக்கேற்ப, சூழ்நிலை அறிந்து விவசாயத்தில் ஈடுபடவேண்டும்,'' என்றார்.
இவரை போல துவரலான் கண்மாய், மந்தி கண்மாய் உள்ளிட்ட கிராமங்களிலும் துலுக்க மல்லி சாகுபடி அதிகரித்துள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...