விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

முந்திரியில் நோய்த் தாக்குதல்: கட்டுப்படுத்த வழிமுறைகள்

கடையநல்லூர், டிச. 18: கடையநல்லூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள முந்திரியில் காணப்படும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலை உதவி இயக்குநர் லி. அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடையநல்லூர் வட்டாரம், சொக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம், பொய்கை. ஊர்மேனியழகியான், போகநல்லூர், சுந்தரேசபுரம் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டுள்ள முந்திரியில் தளிர் பிணைக்கும் புழுத்தாக்குதல் காணப்படுகிறது.

இதனால் பிஞ்சு பிடிப்பு பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதைத் தடுக்க குளோர்பைரிபாஸ்-20 இசி என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் முந்திரியில் தேயிலைக்கொசுவின்(சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்துடன் காணப்படும்) தாக்குதலும் காணப்படுகிறது.

இது குறைவான எண்ணிக்கையில் காணப்பட்டாலும், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகம்.

இவ்வகை கொசுத் தாக்குதலால் பூங்கொத்துக்கள் மற்றும் பிஞ்சுகள் கருகிவிடும். எனவே, இதைத் தடுக்க டிசம்பர், ஜனவரி மாதங்களில் முந்திரி பூக்கும் பருவத்தில் குளோர்பைரிபாஸ்-20 இசி என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 மி.லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்திரியின் பிஞ்சு பருவத்தில் கார்பரில் (50 டபுள்யூ.பி.) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

கரைசல் இலைகள் மீது முழுவதுமாகவும், உள்வாட்டத்தில் கிளைப்பகுதியில் படும்படியும் தெளிக்க வேண்டும் என்றார் அவர்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...