விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

செம்மை நெல் சாகுபடி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் செம்மை நெல் சாகுபடி அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் செம்மை நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இது வரை விவசாயிகள் 30 நாள் நாற்று விட்டு, அதனை பிடுங்கி நட்டு பயிரிட்டனர். செம்மை நெல் சாகுபடியில் 14 நாள் நாற்று நடுவதற்கு போதுமானது. நிறைய கிளை விட்டு, தூர் அதிகரித்து காணப்படும். வயலுக்கு இறைக்கும் நீர் மிச்சமாவதுடன் மின்சார செலவும் குறைகிறது.
செம்மை நெல் சாகுபடி குறித்து கள்ளக்குறிச்சி வேளாண்மை துறை உதவி இயக்குனர் சங்கர் கூறுகையில், நெல் நடவுகளின் போது ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதை நெல் தேவை. செம்மை நெல் சாகுபடிக்கு 3 கிலோ நெல் போதுமானது. இடைவெளி அதிகம் விட்டு நடுவதால், அரசு மானியத்தில் களை எடுக்கும் மிஷினை கொண்டு களை எடுப்பதால் கூலியும் குறைகிறது. வழக்கமாக அறுவடை செய்யும் நெல்லைவிட, ஒரு ஏக்கருக்கு 500 முதல் ஆயிரம் கிலோ வரை அதிகமாக மகசூல் கிடைக்கும் என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...