விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மண் புழு தயாரிக்க மானியம்

பல்லடம் : பூமலூரில் நடந்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில், மண் புழு உரம் தயாரிக்க ஒரு யூனிட்டுக்கு 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
நீர்வள திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி, பூமலூர் மலைக்கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது. பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார்.
வேளாண் உதவி இயக்குனர் பத்மினி பேசுகையில், ""நீர்வள நிலவள திட்டத்தில், பல்லடம் வட்டாரத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீது செய்யப்பட்டுள்ளது. பயறு வகை, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி செயல் விளக்கங்களுக்கு விதை, உரங்கள், உயிர் உரங்கள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. சில்பாலின் முறையில் மண்புழு உரம் தயாரிக்க, யூனிட் ஒன்றுக்கு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது,'' என்றார்.
நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர் சாகுபடி பற்றி வேளாண் பல்கலை பேராசிரியர் கிறிஸ்டோபர் லூர்துராஜ் பேசினார். நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்வது குறித்து உதவி வேளாண் அலுவலர் லதா செயல் விளக்கம் அளித்தார். விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு துணை வேளாண் அலுவலர் மணி பதிலளித்தார். வேளாண் அலுவலர் வசந்தாமணி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாட்டை வேளாண் அலுவலர் கவிபாரதி செய்திருந்தார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...