விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மீன் குஞ்சு பண்ணை அமைக்க அரசு நிதி

விருதுநகர் : விருதுநகர் மீன் வள உதவி இயக்குனரின் செய்திக் குறிப்பு:தேசிய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 3 மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைக்க அரசு மானியத்தில் நிதி உதவி அளிக்கிறது. அரசு மீன் குஞ்சு பண்ணையோடல்லாமல் தனியார் மீன் குஞ்சு வளர்ப்பை ஊக்குவித்திடவும், மாவட்ட மீன்குஞ்சு தேவையை நிவர்த்தி செய்யவும், தனியார் மூலம் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை அமைப்பதை ஆதரிக்கும் முகமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு எக்டேர் நிலமும், நல்ல நீர் வளம் மற்றும் நீர் ஆதாரமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு பண்ணையில் 5 லட்சம் விரலளவு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான திட்ட மதிப்பீடு 3 லட்சமாகும். மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் மீன் வளர்ப்பில் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.இந்த மதிப்பீட்டில் தனியார் பண்ணை அமைத்தபின் பண்ணை ஒன்றுக்கு 50 சதவீதம் மானியமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் மீன் வள உதவி இயக்குனர் அலுவலகம், (உள்நாட்டு மீன் வளம்),120, ராஜாமணி ஹால், அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகர் என்ற முகவரிக்கு வந்து விண்ணப்பம் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...