விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நெல் பயிரில் இலை சுருட்டல் நோய் அறிகுறி

சிவகங்கை : நெற்பயிரில் இலை சுருட்டல், குலை, யானை கொம்பன் நோய் அறிகுறி தென்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நோய் கண்ட வயலில் எண்டோசல்பான் அல்லது குவலைப்பாஸ் ஏக்கருக்கு 400 மில்லியுடன், பெவிஸ் டின் 100 மில்லி சேர்த்து தெளிக்க வேண்டும். மழைக்கு பின் இரண்டு நாட்கள் கழித்தே மருந்து தெளிக்க வேண்டும். மழையை பயன்படுத்தி அதிக மகசூல் பெற, ஏற்கனவே அடி உரம் இட்ட வயல்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா இடவேண்டும். 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறை யூரியா இடலாம்.
விவசாய துணை இயக்குனர் ரவிகுலசேகர பாண்டியன் கூறுகையில், ""மாவட்டத்தில் விற்கப்படும் பூச்சி மருந்துகள் தரமானதா? என ஆய்வு செய்யப்படுகிறது. கடைகளில் 350 மருந்துகள் மாதிரி எடுக்கப்பட்டது. அதில் மூன்று மருந்துகள் தரமற்றதாக இருந்ததால், தடைசெய்ய பரிந்துரை செய்யப்பட்டுள் ளது. தரமற்ற மருந்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...