விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

.சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை

நாகையில் தாழ்வான பகுதியில் சாகுபடி வயல்களில் காணப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலை மடக்கு புழுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழையால் நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள வயல்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலை மடக்கு புழுக்கள் காணப்படுகிறது. வடிகால் வாய்க்கால்களில் உள்ள புல், புதர்கள் மற்றும் களைசெடிகள், ஆகாயத்தாமரை போன்ற செடிகளால் வயலில் தேங்கி நிற்கும் நீர் விரைந்து வடிவதற்கு இடையூறாக இருக்கும். சமுதாய நோக்கத்துடன் வயல்களில் காணப்படும் மேற்கண்ட களைச்செடிகளை அகற்றி வடிகால் வசதியை மேம்படுத்தவேண்டும்.

மழைநீர் தொடர்ந்து வயலில் நின்று கொண்டும், வடிந்து கொண்டும் இருப்பதால் வேர்ப்பகுதியில் காற்றோட்டம் தடைப்பட்டு வெளிறிய மஞ்சள் நிறமாக பயிர் காணப்படும். மேலும் நுண்ணூட்ட சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும் அளவு குறைந்துவிடும். இதற்கு மேலுரமாக யூரியாவை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வயலில் உள்ள நீரை வடிகட்டிய பின்னர் ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட சத்துடன் 15கிகி மணல் கலந்து சீராக தூவவேண்டும்.ஏக்கருக்கு 1 கிலோ சிங்க் சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளைகளில் சீராக தெளிக்கவேண்டும். அனைத்து வேளாண் மையங்களிலும் நெல் நுண்ணூட்டச்சத்து தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.சூல்கட்டும் மற்றும் பூக்கும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து ஒரு இரவு ஊறவைத்த பின்னர் மறுநாள் நீரை மட்டும் மேலாக உரக்கரைசலை வடிகட்ட வேண்டும். இக்கரைசலுடன் 190 லிட்டர் நீரை கலக்க வேண்டும். அதனுடன் 2 கிலோ யூரியா, 2 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை கரைக்க வேண்டும்.இவற்றை மாலை வேளைகளில் இலைவழி உரமாக ஒரு ஏக்கர் நெற்பயிரில் கைத்தெளிப்பானால் தெளிக்கவும். பூச்சி பூஞ்சான நோய்கள் தென்பட்டால் அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர் துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை அணுகி பரிந்துரை பெறலாம்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...