விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

புதுக்கோட்டையில் மண்புழு உற்பத்தி மையம் விவசாயிகள் முன்வந்தால் ரூ.50,000 மானியம்: வேளாண் துறை அறிவிப்பு

"புதுக்கோட் டை மாவட்டத்தில் மண்புழு உர உற்பத்தி மையம் அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மானியம் மற்றும் வங்கி கடனுதவி பெற்றுத்தரப்படும்' என வேளாண் துறை உறுதியளித்துள்ளது. புதுகை மாவட்ட வேளாண் துறை சார்பில் இணை இயக்குனர் ராஜூ வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரி மழையளவை விட மிகவும் குறைவாக பெய்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 37 மி.மீ., மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யவில்லை. மழை பெய்வதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக மாவட்டம் முழுவதும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதன்காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வறட்சியான நிலை தென்படுகிறது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் ஒரு மாதம் வரையில் மட்டுமே பாசனத்துக்கான தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, இருக்கின்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர் சாகுபடியை பூர்த்தி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும். செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றுவதன் மூலம் தண்ணீரின் தேவை குறைவதோடு, அதிக மகசூல் கிடைக்கவும், சாகுபடி செலவு குறையவும் வாய்ப்பாக அமையும் என்பதால் விவசாயிகள் அனைவரும் செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றவேண்டும்.இதற்கு தேவையான கோனாவீடர், மார்க்கர், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், கைத்தெளிப்பான் போன்ற உபகரணங்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்புகொள்ளலாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் மாவட்டந்தோறும் பயிர் சாகுபடியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மண்புழு உர உற்பத்தி மையம், முனிசிபல் கம்போஸ்ட் உர உற்பத்தி மையம் மற்றும் உயிர் இடுபொருள் உற்பத்தி மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மண்புழு உர உற்பத்தி மையம் அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இவைதவிர, வங்கிகள் மூலம் கடனுதவியும் பெற்றுத்தரப்படும்.இதுபோன்று முனிசிபல் கம்போஸ்ட் உர உற்பத்தி மையம் அமைக்க முன்வரும் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயும், உயிர் இடுபொருள் உற்பத்தி மையம் அமைக்க முன்வரும் சுயஉதவிக் குழுக்களுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் அரசு சார்பில் மானியமாக வழங்கப்படும். மாவட்டத்தில் கரும்பு சாகுபடியை அதிகரிக்கும் விதமாக துல்லிய பண்ணையம் அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி, அன்னவாசல் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் 90 ஹெக்டேர் பரப்பளவில் துல்லிய பண்ணையம் அமைக்கப்பட்டது. இந்தாண்டு கறம்பக்குடி, அரிமளம், விராலிமலை, குன்றாண்டார்கோவில் பஞ்சாயத்து யூனியன்களில் 120 ஹெக்டேர் பரப்பளவில் துல்லிய பண்ணையம் அமைக்கப்படும். இதன்மூலம் கரும்பு விவசாயிகளுக்கு நவீன சாகுபடி முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...