விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

விவசாயம் பொய்த்தாலும் குறைந்த அளவே இழப்பு : ஊடுபயிராக வெங்காயம், மல்லிபயர்

முதுகுளத்தூர் : விவசாயம் பொய்த்தாலும் குறைந்த அளவு மட்டுமே இழப்பு ஏற்படும் என்பதால் ,முதுகுளத்தூர் பகுதியில் மிளகாய் விவசாயத்தில் ஊடுபயிராக வெங்காயம், மல்லி, பயறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
மாவட்டம் வறட்சிக்கு பெயர்பெற்றதால், விவசாயிகள் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது காலம் தவறி பெய்த கனமழை, அடிக்கடி வங்க கடலில் ஏற்பட்ட புயல் மழையால் பல பகுதிகளிலும் விவசாயம் ஓரளவிற்கு செழிப்பாக உள்ளது. முதுகுளத்தூர், தேரிருவேலி, தாழியரேந்தல், மல்லல் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் கரிசல் மண்ணாக இருப்பதால் ,நெல் விவசாயம் செய்ய ஏதுவாக இல்லை. இதனால், விவசாயிகள் மிளகாய் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பயிர்கள் மழை குறைந்தாலும், செழிப்பாக காட்சி தருகிறது. பருவ மழை நின்றாலும் மிளகாய் விவசாயத்தில் ஏற்படும் இழப்பீட்டை சரிசெய்ய, ஊடுபயிராக வெங்காயம், மல்லி, மற்றும் பயறு வகைகளை பயிரிடுகின்றனர்.இதன் மூலம் குறைந்த அளவு இழப்பீட்டை சந்திப்தோடு, நஷ்டமடையாமல் இருக்கவும், கிராமங்களை விட்டு இடம்பெயர்வதும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரிசல் மண் நிலங்கள் உள்ள பகுதி விவசாயிகளுக்கு, எந்த பயிர் விவசாயம் செய்தால், செழிப்பாக இருக்கும் என்ற பயிற்சிகளை சம்மந்தப்பட்ட விவசாய துறையினர் அளிக்க வேண்டும். விவசாயிகள் பாதிக்காமல் இருக்கவும், ஊடுபயிரினை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கு போதுமான கடன்கள் வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...