வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி
முற்பகல் 2:08 வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி 0 கருத்துகள் Admin
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி ஜன.6-ம் தேதி நடைபெறுகிறது.இது குறித்து வேளாண் பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் பல்கலை.யில் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில், தேனீ கூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களை சேர்த்து வளர்க்கும் முறை, ராணி தேனீ உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிர்வாகம், இத்தாலிய தேனீ வளர்ப்பு முறை ஆகியவை கற்றுத் தரப்படும்.பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை-3, தொலைபேசி எண்:0422-6611214 என்ற எண்ணிலும் அல்லது ங்ய்ற்ர்ம்ர்ப்ர்ஞ்ஹ்ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புக் கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.150-யை நேரடியாகப் பயிற்சிக்கு வரும்போது செலுத்த வேண்டும். ஜன.6-ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை பூச்சியியல் துறையில் பயிற்சி நடைபெறும். மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, கோவை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

குறிச்சொற்கள்: வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...