விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

சம்பா நெற்பயிரை காக்கவேளாண் துறை யோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் நெல்பயிரை தாக்கும் ஆணைக்கொம்பன் பூச்சியின் தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து மாவட்டவேளாண் இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நெல்சம்பா பருவத்தில் 27ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெல் ரகங்களில் பரவலாக பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது.குறிப்பாக சம்பா நெற்பயிரில் ஆணைக்கொம்பன் பூச்சியின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

இதன் பாதிப்பின் அறிகுறி 20- 30 நாள் கழித்து தான் தெரியவரும். நெல்பயிரின் வளர்ச்சி குன்றி, வெங்காய தாள் போல் சுருண்டு காணப்படும். பாதிக்கப்பட்ட பயிரில் இருத்து கதிர் வராது, விளைச்சல் வெகுவாக பாதிக்கப்படும்.இதனை கட்டுப்படுத்த நெல் நடவு செய்யும் போது ஏக்கருக்கு கார்டப்ஹைட்ரோ குளோரைடு குருணை 5 கிலோ அல்லது பிப்ரோனில் 5 கிலோ குருணை அல்லது கார்போபூயூரடான் குருணை 5 கிலோ அல்லது போரோட் குருணை 5 கிலோ இவற்றில் ஏதாவது ஒன்றை இட்டு கட்டுப்படுத்தலாம். நடவு செய்யப்பட்டுள்ள பயிரில் கார்டப் ஹைட்ரோ குளோரைடு ஏக்கருக்கு 400 கிராம் அல்லது பாஸ்போமிடான் 150 மில்லி லிட்டர் பூச்சிக்கொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...