விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

காய்கறிகளில் உரம், பூச்சி மருந்து விஷம்:இயற்கை வேளாண் விஞ்ஞானி கவலைகாய்கறிகள் அனைத்திலும் உரம், பூச்சி மருந்து மூலம் விஷம் கலந்துள்ளதால் நோய்கள் ஏற்படுவதாக,'' ஈரோட்டில் நடந்த விழாவில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.ஈரோட்டில் பரஞ்ஜோதி ஞானஒளி பீடம் அறக்கட்டளை என்ற உலக சமாதான ஆலயம் சார்பில், பரஞ்ஜோதி மகான் சத்யோதயத்தின் ஏழாம் திருநாள் விழா நடந்தது.பரஞ்ஜோதி ஞானஒளிமகான் தலைமை வகித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாழ்வார் பேசியதாவது:உலகளவில் சமத்துவம், சமாதானம் வரவேண்டும். அடுத்தவர் கொடுத்த நன்கொடையை பிரித்து நன்கொடை கொடுப்பது நன்கொடை இல்லை. ஒருவர் தானாக உற்பத்தி செய்த பொருளை அடுத்தவர்களுக்கு வழங்குவது தான் நன்கொடை. அது உழவரால் தான் செய்யமுடியும். ஆனால் அதை உழவர் இப்போது செய்ய முடியாது.வீட்டின் மாடிகளில் காற்கறி தோட்டம் அமைக்கலாம். இதன்மூலம் நாமே நமக்கு தேவையான காய்கறியை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய முடியும். தற்போது சாப்பிடும் காய்கறிகள் அனைத்திலும் உரம், பூச்சிமருந்து விஷம் கலந்துள்ளதால் மக்களுக்கு நோய்கள் ஏற்படுகிறது.அனைத்து பூச்சிகளுமே பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதில்லை. நன்மை செய்யும் பூச்சிகள் உள்ளன.சிலந்தி செடியில் அமைக்கும் வலையில், பிற பூச்சிகள் சிக்குவதை சாப்பிடுகிறது. தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் அதிகம் உள்ளன. வியாபாரத்தை மையமாக வைத்து தற்போது பசுமை புரட்சி செய்கின்றனர். டிராக்டருக்கு டீஸல் விற்றவர்கள், பூச்சி மருந்து, உரம் விற்றவர்கள் எல்லாம் பணக்காரராகி விட்டனர்.ஆனால் விவசாயி இன்னும் கடனாளியாகவே உள்ளான்.மனித ஆற்றலை வளர்ப்பது பகுத்தறிவு. இதில் இரண்டு பிரிவு உள்ளது. அறம் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். அது செய்யவிட்டால் பலன் இல்லை. இரண்டாவது மனித பண்பு. பிற உயிரை பாதுகாக்க வேண்டும். பயிர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பூச்சியை கொல்கின்றனர்.காய்கறிகள் பிற பகுதிகளிலிருந்து வருவதால், அதை எடுத்துவரும் லாரி புகையால் மாசு ஏற்படுகிறது. அதனால் மழையில்லை. நடவு நேரத்தில் பெய்ய வேண்டிய மழை அறுவடை நேரத்தில் பெய்கிறது. அந்தந்த பகுதியிலேயே முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும்.அறுவடை செய்த பின்பு பயிரின் கழிவை நிலத்தில் போட்டால், களை செடிகள் வளராது. அத்துடன் கழிவுகள் மக்கி உரமாகும். மாட்டுக்கு தவிடு, வைக்கோல் போன்ற கழிவுகளை போடுகிறோம். அது நமக்கு தேவையான பாலை தருகிறது. அரிசியில் மாவு மட்டும் தான் உள்ளது. ஆனால் பாலில் அனைத்து சத்தும் உள்ளது. இயற்கை நமக்கு அளித்ததை அதற்கு நாம் மீண்டும் அளிக்க வேண்டும். அழிந்த இயற்கையை மீண்டும் வளர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...