விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

கன்று ஈனும் கால்நடை பராமரிக்க 'அட்வைஸ்'


கன்று பிறக்கும் காலத்தில் கடைபிடிக்கப்படும் சரியான உணவு முறையா கால்நடைகளை காப்பாற்ற முடியும்' என்று ஆண்டிப்பட்டிகோட்டை கால்நடை மருத்துவமனை டாக்டர் விஜயகுமார் அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கால்நடை கன்று ஈனும் காலத்தில் கடைபிடிக்கப்படும் முறையான உணவு முறையில் கால்நடை உணவுக்கு பிறகு அசைபோடும் இயல்பு உள்ளவை. புல் சம்பந்தப்பட்ட சோளதட்டு, வைக்கோல் உள்ளிட்ட நார் சத்து பொருள் அசைபோடுவதற்கு உதவும். அரிசி, சோளம், கம்பு உள்ளிட்ட மாவு சத்து பொருட்களை அதிகமாக சாப்பிடும் கால்நடை வயிற்றில் "லேக்டிக் அமில கரைசல்' உருவாகி குடல் அரிப்பு, வலி, ரத்த அமிலத்தன்மை, சிறுநீர் பாதை எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும். கால்நடை இறக்கும் நிலையும் ஏற்படும்.


இவை தவிர்த்து தானியம், மாவுவகை, கூழ்வகை அளவோடு கொடுக்க வேண்டும். பழைய சாதம் கால்நடைகளுக்கு வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கால்நடைக்கு ஏதேனும் பாதிப்பு அறிகுறி தெரிந்தால் உடனுக்குடன் தண்ணீரில் சமையல் சோடாவை கரைத்து கொடுக்க வேண்டும். அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். கன்று ஈனும் காலத்தில் முதல் மூன்று நாள் பசுந்தீவனம், தவிடு இவை போதுமான உணவுமுறை. தொடர்ந்து சோளம், கம்பு என படிப்படியாக கூடுதலாக ஊட்டசத்துள்ள உணவு கொடுக்கலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...