பயிர்களில் பூச்சிதாக்குதலை சமாளிக்க நவீன அணுகுமுறை
பிற்பகல் 12:07 பயிர்களில் பூச்சிதாக்குதலை சமாளிக்க நவீன அணுகுமுறை 0 கருத்துகள் Admin
நெல், பருத்தி, நிலக்கடலை, மக்காச் சோளம், பயறு மற்றும் காய்கறி பயிர்களில் பூச்சிமருந்து தெளிப்பதை குறைத்து தாவர, உயிரின பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம் என மதுரை விவசாயக் கல்லூரி வேளாண் அறிவியல் மைய பூச்சியியல் துறை பேராசிரியர் சந்திரமணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது :பயிர்களில் "சின்தடிக் பைரித்ராய்டு' வகை பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது இலை தின்னும் புழுக்கள் உடனடியாக குறையும். ஆனால் சாறுஉறிஞ்சும் பூச்சிகள், அஸ்வினி, தத்துபூச்சி, மாவுபூச்சி, இலைப்பேன்கள் ஆயிரக்கணக்கில் பெருகும். ஒருங்கிணைந்த பூச்சிகட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்தினால், காய்கறிகளில் நச்சுத்தன்மை குறையும். உளவியல் முறையில் பருத்திச்செடி பத்து வரிசைக்கு ஒரு வரிசை தட்டாம்பயறு வகைகளை விதைத்தால் பொரிவண்டுகள் அதிகமாகத் தோன்றும். இது பருத்தியைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தின்றுவிடும். வயலைச்சுற்றிலும் ஆமணக்குச் செடிகளை பயிரிடலாம். பயிர்களை அழிக்க வரும் பூச்சிகள், ஆமணக்குச் செடியை முதலில் தாக்கும். அதை அப்படியே பிடுங்கி அழித்துவிடலாம். காய்கறி, பருத்திப் பயிர்களில் ஓட்டை காய்கள், பழுத்த இலைகள் கீழே விழுந்தாலோ, அல்லது செடியில் இருந்தாலோ உடனடியாக கையால் பறித்து, எரிக்கவேண்டும்.
பயிருக்கேற்ற இனக்கவர்ச்சிப் பொறிகளை வயல்களில் வைக்க வேண்டும். சாறுஉறிஞ்சும் பூச்சி, வெள்ளை பூச்சி, தத்துபூச்சி, அஸ்வினி பூச்சிகள் மஞ்சள் நிறத்தால் கவரப்படும். டப்பா மீது மஞ்சள் பெயின்ட் தடவி காய்ந்ததும், வேப்பெண்ணை தடவி, வயலில் குச்சியை ஊன்றி கவிழ்த்து வைக்கலாம். பூச்சிகள் அனைத்தும் எண்ணெய் மீது படிந்துவிடும். இத்தகைய பயிர் பாதுகாப்பின் மூலம் பயிருக்கு 7 முறை மருந்து தெளிப்பதற்கு பதிலாக, மூன்று முறை மட்டும் தெளித்தால் போதும். மகசூல் அதிகரிக்கும்.

குறிச்சொற்கள்: பயிர்களில் பூச்சிதாக்குதலை சமாளிக்க நவீன அணுகுமுறை
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...