விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

பயறு வகைகளில் அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்

பயறு வகைகளில் அறுவடைக்குபின் நேர்த்தி முறைகளை கையாண்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என விருத்தாசலம் வேளாண் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் தனவேல், கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உளுந்து, பச்சைபயறு, துவரை மற்றும் தட்டைபயறு ஆகிய வகைகளில் கூடுதல் வருமானம் பருப்பு சதவீதத்தை பொறுத்தே அமைகிறது. பயறு வகைகளில் 85 சதவீத பருப்பு அளவும், கூடுதல் விலையும் பெற அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள். பயறு வகை காய்கள் நெற்றுகளாக மாறியும், இலைகள் பழுத்து உதிர ஆரம் பிக்கும் போது அறுவடை செய்ய வேண் டும். நெற்றுக்கள் காப்பிக்கொட்டை நிறமாகி இருந்தால் நெற்றுக்களைப் பிரித்து எடுக்க வேண்டும். செடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட நெற்றுக்களை காயவைத்து விதைகளை பிரித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். பிரித்து எடுத்த விதைகளில் கலந்துள்ள கல், மண், தூசி மற்றும் சருகுகள், முதிராத விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகள், உடைந்த விதைகள் இவைகளை தனியாக நீக்க வேண்டும்.


விதைகளின் ஈரப்பதம் 9 சதவிகிதத்திற்கு இருக்குமாறு நன்கு காய வைக்க வேண்டும். ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை பயறுவகைப் பொருட்களுடன் 1: 100 என்ற விகிதத்தில் கலந்து வைப்பதால் பூச்சிகள் வராமல் காப்பாற்றலாம். இதை தவிர வேப்பங்கொட்டை தூளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் உபயோகித்து பயன் பெறலாம். துவரை விதைக்கு செம்மண் தடவி காயவைத்தும் சேமிக்கலாம். பயறு வகை விதைகள் ஸ்பெஷல், நல்லது, சுமார், சாதாரணம் என நான்கு தரங்களாக பிரிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் ஒழுங்குமுறை கூடத்திற்கு பயறுகளை கொண்டு வந்து லாபம் அடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...