பூச்சி தாக்காத வீரிய ஒட்டுரகநெல் சாகுபடி செய்தால் லாபம்: வழிகாட்டுது வேளாண்துறை
முற்பகல் 7:02 பூச்சி தாக்காத வீரிய ஒட்டுரகநெல் சாகுபடி செய்தால் லாபம் 0 கருத்துகள் Admin
பூச்சி தாக்காத வீரிய ஒட்டுரக நெல் சாகுபடி செய்து லாபம் காணலாம் என செய்யாறு வேளாண்துறை வழிகாட்டி உள்ளது.இது குறித்து வேளாண் துறை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:கோ.ஆர்.எச்.3 என்ற வீரிய ஒட்டு நெல் ரகம் 115 நாட்கள் சாகுபடி கொண்ட குறுகிய கால பயிராகும். இதில் கடந்த கால உயர் விளைச்சல் ரகங்களை விட 25 சதம் கூடுதல் மகசூல் பெறலாம். சொர்ண வாரி, சம்பா, நவரை என 3 போகங்களிலும் இதை சாகுபடி செய்யலாம். இதற்கு பசுந்தாள் 6 ஆயிரம் கிலோ அல்லது 12 ஆயிரம் கிலோ தொழு உரம் போடலாம்.
இது ஒன்று போல பூக்கும் தன்மை உடையது.பச்சை தத்து பூச்சிக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. வெண்முதுகு தத்துபூச்சி மற்றும் புகையானையும் தாங்கும் சக்தி, குலை நோய், துங்குரோ வைரஸ் தாங்கும் சக்தி உள்ளது. நடவு முறையில் ஏக்கருக்கு 15 கிலோ மற்றம் சென்மை நெல் சாகுபடி முறைக்கு 5 கிலோ போதுமானது. நடவு மற்றம் நாற்றங்கால் வயல்களில் நோய்களின் சேதநிலையறிந்து பயிர் பாதுகாப்பு செய்யலாம். உர அளவுகளும் மிக குறைவாக பயன்படுத்திடலாம்.பயிர் பூத்த 30 முதல் 35 நாட்களில் இதை அறுவடை செய்திடலாம். எக்டோருக்கு 7 ஆயிரத்து 500 கிலோ சாகுபடி செய்யலாம். மேலும் விபரம் வேண்டுவோர் வேளாண் உதவி இயக்குனர், சாந்தி, 04182-222248, 98423 17815என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: பூச்சி தாக்காத வீரிய ஒட்டுரகநெல் சாகுபடி செய்தால் லாபம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...