விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் வேளாண் அதிகாரி அறிவுரை

பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜ், உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளார். தற்போது தை, மாசி பட்டங்கள் உளுந்து சாகுபடிக்கு ஏற்றதாகும். நடப்பு பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய ஆடுதுறை ஐந்து, வம்பன் மூன்று ஆகிய ரகங்கள் சிறந்தது. ஒரு ஏக்கர் நிலத்தை தொழு உரமிட்டு நான்கு முறை நன்றாக உழவேண்டும். உளுந்துக்கு ரசாயன உரம் இடத் தேவையில்லை. ஆனால், பயிர் நுண்ணுரம் ஐந்து கிலோவுடன் 20 கிலோ மணல் கலந்து கடைசி உழவின் போது மேலாக இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி என்ற நோயை கட்டுப்படுத்தும் பூஞ்சாணத்தை கலந்து அத்துடன் பயிர் ரைசோபியம் உயிர் உரத்தை கல்ந்து 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.


வரிசை, வரிசையாக ஒரு அடி இடைவெளியும், செடிக்கு, செடி கால் அடி இடைவெளியும் இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும். விதைத்த 30வது நாள் களைகளை அகற்ற வேண்டும். பூக்கும் தருணத்தில் 20 மற்றும் 35வது நாளில் இரண்டு முறை நாலரை கிலோ டி.ஏ.பி.,யை பத்து லிட்டர் நீரில் கலந்து 24 மணி நேரத்துக்குப்பின் அக்கரைசலில் மேலாக உள்ள தெளிந்த நீரை வடித்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். பயிர் வாடினால் மட்டும் தண்ணீரை மேல்மட்டமாக இறைத்தால் போதும்.
இதேபோல் பூச்சி நோயை கட்டுப்படுத்த, காய் புழுக்களை கட்டுப்படுத்த பேலஸ் சிரஞ்சியான் என்ற எதிர் உயிர் பேக்ட்ரியாவை ஏக்கருக்கு 400 கிராம் முதல் 600 கிராம் வரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தேளிப்பதன் மூலம் காய்புழுக்கள் மற்றும் இலை உண்ணும் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.


பூச்சி தாக்குதல் அதிகாமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மில்லி எண்டோசல்பான் அல்லது குளோரி பைரி பாஸ் 400 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்தலாம். சாம்பல் மற்றும் வேர் வாடல் நோய் தாக்குதல் தென்பட்டால் 100 கிராம் கார்பன்டிசம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தேளிக்க வேண்டும். இவ்வாறு சய்வதன் மூலம் ஒரு ஏக்கர் உளுந்து சாகுபடியில் 700 கிலோ முதல் ஒரு டன் வரை மகசூல் பெறலாம். தற்போது உளுந்துக்கு நல்ல விலை கிடப்பதாலும், 70 நாட்களில் மகசூல் பெறுவதாலும் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...