விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

தென்னை நாற்றில் மூன்று கன்றுகள்உச்சிப்புளி அருகே புதுமடத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். வலங்காபுரி கிராமத்தில் இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.தென்னை நாற்றுகளை எடுத்து பதியம் போடுவது வழக்கம்.சமீபத்தில் போடப்பட்ட பதியத்தில் ஒரே தேங்காயில் மூன்று கன்றுகள் வளர்ந்துள்ளன. இதை விவசாயிகள் ஆர்வமாக பார்த்து சென்றனர்.


விவசாயி ஸ்ரீதரன் கூறியதாவது: ஏற்கனவே ஒரே தென்னையில் மூன்று கிளைகள் இருந்தன.அந்த மரங்களில் காய்களும் குறைவில்லாமல் காய்த்தன.சில ஆண்டுகளுக்கு முன் வீசிய பலத்த காற்றில் மரம் சாய்ந்தது.அதன் பின் தற்போது ஒரே நாற்றில் மூன்று கிளைகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள மரம் சாய்ந்த இடத்தில் போட்ட பதியத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. தற்போதை இதைபாதுகாத்து வளர்த்து வருகிறோம், என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...