விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

நெற்பயிரில் குலைநோய்: தடுப்பது எப்படி?தேவகோட்டை அருகே குருந்தனக்கோட்டை, செலுகை, குமாணி, வீழிமார், சுற்று பகுதிகளில், நெற்பயிரில் புகையான், குலைநோய் தாக்கி உள்ளது.
விவசாய துணை இயக்குனர் சம்பத் கூறியதாவது: போதிய சூரிய வெளிச்சம் இல்லாமை, கூடுதல் தழைச்சத்து, பனியால் இந்நோய்கள் தாக்கியுள்ளன. இவற்றை கட்டுப்படுத்த, சூரிய ஒளி படும்படி 8 அடிக்கு ஒரு பட்டம் வீதம் பிரித்து, காற்றோட்ட வசதி உண்டாக்க வேண்டும். பூச்சிகளை இரவில் விளக்கு பொறி வைத்து அழிக்கலாம்.
குலை நோய்க்கு ஒரு ஏக்கருக்கு, "கார்பன்சிம்' -100 கிராம், "எடிபன்பாஸ்'- 200 மி.லி., "கிட்டாசின்'- 200 மி.லி., "பிளாஸ்டோகான்'- 120 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்கலாம்.
புகையான் நோய்க்கு, "பாசலோன்'- 400 மி.லி., "குளோரிபைரிபாய்'- 400 மி.லி., "டைகுளோர்வாய்'- 150 மி.லி., "மீதைல் டெமட்டோன்' -0. 400 மி.லி., இவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்கலாம். தெளிப்பானுக்கு தக்கவாறு நீர் கலக்க வேண்டும், என்றார்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...