விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

இலவச வேளாண் வணிகப் பயிற்சி

இலவச வேளாண் வணிகப் பயிற்சி


மத்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் சார்பில் வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

÷2002}ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த இரண்டு மாத கால இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை, கால்நடை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை, வனஇயல், மனையியல் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

÷பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, பயிற்சி ஏடுகள், நிர்வாகம் மற்றும் திட்டமிடும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும்.

÷இந்தப் பயிற்சி ஜனவரி 30 ம் தேதி தொடங்க உள்ளது. தகுதியுடையவர்கள், மதுரை சொக்கிக்குளம் பெசன்ட் சாலையில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனைத் தொழில் பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விபரங்களுக்கு: 0452 - 2538642, 4361903 தொலைபேசி எண்களையும், 98942 46874, 99769 13781 ஆகிய செல்பேசி எண்களையும் தொடர்புகொள்ளலாம்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...