நிரம்பிய கண்மாய் விவசாய பணிகள் தீவிரம்
முற்பகல் 2:09 நிரம்பிய கண்மாய் விவசாய பணிகள் தீவிரம் 0 கருத்துகள் Admin
ஒட்டன்சத்திரம்: பரப்பலாறு அணை திறக்கப்பட்டு ஒட்டன்சத்திரத்தில் கண்மாய்கள் நிரம்பி மறுகால் சென்றதால் வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பரப்பலாறு அணை பாசனத்திற்காக திறக்கப் பட்டது. இதனையடுத்து தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் சென்றது. இந்த குளம் நிரம்பியதால் அருகிலுள்ள தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, சிந்தலைப்பட்டி, தலைவாசல் கவுண்டன் புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் பிரச் னைக்கும் தீர்வு கிடைத் துள்ளது.சடையன்குளம் நிரம்பியதை தொடர்ந்து செங் குளம், ராமசமுத்திரம் கண் மாய், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் நிரம்பும் நிலையில் உள்ளது.குளம் கண்மாய்கள் நிரம்பி உள்ளதால்,இப்பகுதியில் வேளாண் பணிகள் முடுக்கி விடப்பட்டுள் ளன.

குறிச்சொற்கள்: நிரம்பிய கண்மாய் விவசாய பணிகள் தீவிரம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானதுஇதனைச் சார்ந்த பதிவுகள்
0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...