விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

அறுவடை பின்செய் நேர்த்தி முறைகளை கையாள விவசாயிகளுக்கு ஆலோசனை

விவசாயிகள் தங்கள் நிலத் தில் பயிரிட்டுள்ள நெல் லில் அறுவடை பின் செய் நேர்த்தி முறைகளை கையாண்டு கூடுதல் விலை பெறலாம் என அறி வுரை வழங்கப் பட் டுள்ளது.
விழுப்புரம் வேளாண் வணிக துணை இயக்குனர் (பொறுப்பு) தனவேல் விடுத் துள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கிணற்று பாசனம் மூலம் முன்னதாக சாகுபடி செய்த சம்பா நெல் பயிர்கள் தற் போது அறுவடை செய் யப்படுகிறது. நெல் மணிகள் அரவையில் 62 சதவீதம் முழு அரிசி கிடைத்தால் தான் நல்ல விலை கிடைக்கும். நெல் லில் அறுவடை பின்செய் நேர்த்தி முறைகளை கையாண்டு கூடுதல் விலை பெறலாம். இதற்கு நெல் கதிர் மணிகள் 80 சதவீதம் மஞ் சள் நிறமாக மாறி இருந் தாலே அறுவடை செய்து மணிகள் உதிர் வதை தவிர்க்கலாம். அறுவடையின் போது 19 முதல் 23 சதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையாகவும், உறுதியாகவும் இருக்கும்.

அறுவடை செய்த நெல்லை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காய வைக்க கூடாது. காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். அதிக ஈரப்பதமுள்ள நெல் மணிகளை சேமித்தால் பூஞ் ஞான வித்துக்கள் பரவி தரம் பாதிக்கும்.
நெல்லை சுத்தமான கோணிப் பைகளில் நிரப்பி தரையின் மீது மரச் சட்டங்கள், வைக்கோல் பரப்பி அதன் மேல் மூட் டைகளை அடுக்கி வைக்க வேண்டும். நெல் மூட்டைகளை சுவரிலிருந்து ஒரு அடி இடைவெளி விட்டு அடுக்கி வைத்தால் சுவற் றின் ஈரப்பதம் நெல் மணிகளை தாக்காது. சேமித்து வைத்துள்ள நெல்லில் அந் துப் பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை 1 லிட்டர் நீருக்கு 10 மி.லி., மருந்து என்ற அளவில் கலந்து தரைப் பகுதி மற் றும் மூட்டைகளின் மீது தெளிக்க வேண்டும். மார்க் கெட் கமிட்டிகளுக்கு விற்பனைக்கு நெல்லை ரகம் வாரியாக கொண்டு வர வேண்டும். பூச்சிகள், பூஞ்ஞானங் கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட் டுப் போன நெல்லை தனியாக பிரிக்க வேண்டும். இந்த முறைகளை கையாண்டு கூடுதல் விலை பெற்று அதிக லாபம் பெறலாம்.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...