விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

மானிய விலையில் உளுந்து விதை

தஞ்சாவூர், நீடாமங்கலம் பகுதி விவசாயிகள் சான்று பெற்ற ஆடுதுறை-5 ரக உளுந்துவிதைகளை மானிய விலையில் வாங்கி பயனடைய வேளாண் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஆடுதுறை-5 ரக உளுந்து விதை நீடாமங்கலம், வடுவூர், கருவாக்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. இதன் வயது 65-75 நாட்களாகும். ஒரு ஏக்கருக்கு 500 கிலோ முதல் 600 கிலோ வரை மகசூல் தரும். தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் மானியத்தில் உளுந்து விதை விநியோகிக்கப்படுகிறது.பயிர் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்டத்தைப் பயன்படுத்தலாம். இந்த நுண்ணூட்டம் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் அடியுரமாகவோ அல்லது இலைவழி உரமாகவோ பயறுக்குத் தெளிக்கலாம்.விவசாயிகள் அனைவரும் மானிய விலையில் உளுந்து விதை மற்றும் பயறு நுண்ணூட்டங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சலை அடைய கேட்டுகொள்ளப்படுகின்றனர்

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...