விவசாயத் தகவல் ஊடகத்தின் தகவல்கள் பகுதி.. இந்த பகுதியில் வேளாண்மை சார்ந்த தகவல்கள் குறித்த பதிவுகள் இடம் பெற்றுள்ளது. உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை காண விவசாயத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பக்கம் வருக...

உளுந்து:விவசாயிகளுக்கு அதிகாரி ஆலோசனை

"உளுந்து ஒரு ஏக்கர் நடவு செய்ய எட்டு கிலோ விதை போதுமானது' என, வேளாண் இணை இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உளுந்து சாகுபடி செய்ய இது சரியான தருணம். ஒரு ஏக்கருக்கு உளுந்து சாகுபடி செய்ய எட்டு கிலோ விதை போதுமானது. பூஞ்சான மருந்தான டிரைக்கோடெர்மாவிரிடி ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால், வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்தலாம். காற்றில் உள்ள தழைச்சத்து கிரகித்துக் கொடுக்கவும், மண்ணில் உள்ள மணிச்சத்தை பயிருக்கு கிடைக்கும் நிலையில் மாற்றித் தரவும் 8 கிலோ விதையுடன் ஒரு பாக்கெட் ரைசோபியம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். பின், அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நடவு வயலுக்கு அடியுரமாக ஏக்கருக்கு நான்கு பாக்கெட் ரைசோபியம், நான்கு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். மேலும், யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ மற்றும் ஜிப்சம் 44 கிலோ இடுதல் அவசியம். விதைப்பு செய்தவுடன் பயிறு வகை நுண்ணூட்டம் இரண்டு கிலோ ஏக்கர் என்ற அளவில் மணலுடன் கலந்து மேலுரமாக இடவேண்டும். பூக்கும் பருவத்தில் இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை பூ பூக்க ஆரம்பித்தவுடன் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து மறு முறையும் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துகள் -இந்த பதிவிற்கு..

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

விவசாய தகவல் ஊடகத்தின் தகவல்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...